கடற்கரையில் உடற்பயிற்சி செய்த நடிகை ராஷ்மிகா மந்தனா!! வைரலாகும் காணொளி இதோ..

கன்னட சினிமாவின் பிரபல நடிகையாக வளம் வருபவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. தற்போது கன்னடம் மற்றும் தெலுங்கு சினிமாவில் நடித்து வருகிறார். நடிகை ராஷ்மிகா மந்தனா ரசிகர்கள் மத்தியில் இளம் நடிகையாக கொண்டாடப்பட்டு வருகிறார். கன்னட சினிமாவில் கொடிகட்டி பறந்த இவர் தெலுங்கிலும் கலக்கி வந்தார். இவர் விஜய் தேவரகொண்டா நடித்து வெளியான கிதா கோவிந்தம் எனும் படத்தின் மூலம் தென்னிந்திய திரையுலகில் பிரபலமானார்.

 

தமிழ் சினிமாவில் நடிக்காமலேயே தமிழ் ரசிகர்களிடம் மூலம் கிதா கோவிந்தம் மூலம் கொண்டாடப்பட்டவர் நடிகை ராஷ்மிகா.அதன்பின் டியர் காம்ரேட், சரிலேறு நீகேவ்வறு, பீஷ்மா உள்ளிட்ட படங்களில் நடித்துவந்தார். தற்போது தமிழ் சினிமாவிலும் இயக்குனர் பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி, பொன்னம்பலம், யோகி பாபு இவர்களுடன் இணைந்து சுல்தான் படத்தில் ராஷ்மிகா மந்தனா கதாநாகியாக அறிமுகமாகிறார்.

சினிமாவில் அவர் பெயர் ஓங்கும் நேரத்தில் அவரது வாழ்க்கை குறித்து சர்ச்சை எழும்பியது, அதாவது அவரது நிச்சயதார்த்தம் முடிவுக்கு வந்தது. இந்நிலையில் தனது சமூக வலைதள பக்கத்தில் அவ்வப்போது புகைப்படங்களை பதிவிட்டு வந்த நடிகை ராஷ்மிகா மந்தனா, தான் கடற்கரையில் கடின உடற்பயிற்சி செய்யும் வீடியோவை தற்போது வெளியிட்டுள்ளார். இதோ அந்த வீடியோ…

 

Leave a Reply

Your email address will not be published.