ஓடிடியில் வெளிவரப்போகும் விஜய் சேதுபதியின் படம்.. வெளியான படத்தின் ரிலீஸ் தேதி!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுள் ஒருவர் நடிகர் விஜய் சேதுபதி. மக்கள்செல்வன் என்று தமிழ் ரசிகர்களால் புகழப் பட்டவர் விஜய் சேதுபதி. இவரின் எதார்த்தமான நடிப்பினால் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானார். தென்மேற்கு பருவக்காற்று திரைப்படத்தில் முன்னணி கதாநாயகனாக நடிக்கும் வரை 5 ஆண்டுகளுக்கும் மேலாக இவர் சிறு வேடங்களில் நடித்தவர். மேலும் லாக்டவுன் முடிந்தவுடன் இவரின் திரைப்படங்கள் வரிசையாக வெளியாகும் என எதிர்பார்க்க படுகிறது.

மேலும் தளபதி விஜய்யுடன் இவர் நடித்த மாஸ்டர் திரைப்படம் மிக பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமின்றி இவரின் ஆரம்பகாலத்தில் ஏகப்பட்ட திரைப்படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். தற்போது விருமாண்டி என்பவற்றின் இயக்கத்தில் மீண்டும் இந்த திரை ஜோடி இணைந்து கணவர் பெயர் ரணசிங்கம் எனும் படத்தில் நடித்துள்ளார்கள். ஆனால் இப்படத்தில் எக்ஸ்டெண்ட்டட் கேமியோ ரோலில் தான் விஜய் சேதுபதி நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் இப்படத்தின் ட்ரைலர் வெளிவந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இப்படம் ஓடிடி யில் தான் வெளிவருகிறது என தகவல்கள் வெளியான. இந்நிலையில் தற்போது இப்படம் ஜீ பிளக்ஸ் ஓடிடியில் அக்டோம்பர் 2ஆம் தேதி வெளிவருகிறது என இப்படத்தின் கதாநாயகி ஐஸ்வர்யா ராஜேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!