ஒரே நிமிடத்தில் மனிதர்களுக்கு பாடம் நடத்திய ஐந்தறிவு ஜீவனான காகம்.. மெய்சிலிர்க்க வைத்த வீடியோ!

கிடைப்பதை பகிரும் தன்மை இயல்பிலேயே காகங்களுக்கு உண்டு. தனக்கு ஏதாவது சாப்பிடக் கிடைத்தால் கூட காகம், கா…கா என கரைந்து மற்ற காகங்களையும் வரவைத்து பகிர்ந்து உண்ணும். இங்கேயும் அப்படித்தான். காகம் ஒன்று தனக்குக் கிடைத்த உணவைச் சாப்பிட்டுக் கொண்டிருந்தது. அதே உணவைத் தேடி ஒரு எலியும் வந்தது. காகம் அந்த உணவை சாப்பிடுவதைப் பார்த்து எலி பயந்து ஓடிவிட்டது. இதைக் கவனித்த காகம், அந்த எலிக்கு தானே ஒரு துண்டு உணவைக் கொண்டு போய் எலி ஓடி மறைந்த தோட்டப்பகுதியில் வைத்து விட்டு வந்து சாப்பிடத் துவங்கியது. எலி அந்த உணவை மகிழ்ச்சியோடு எடுத்துப் போய் சாப்பிடுகிறது. ஐந்தறிவு ஜீவனான காகம், நமக்கு அழகான பாடத்தை இதில் நடந்தியிருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published.