ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்ட மற்றொரு பெண்! – காரணம் கேட்டு கடுப்பான பெற்றோர்! அதிர்ச்சியில் உறவினர்கள்!

இந்தியாவில் திருமணம் செய்து கொண்ட இரண்டு பெண்கள், தங்களை பிரிக்க நினைத்தால் தற்கொலை செய்துவிடுவோம் என்று மிரட்டல் விடுத்துள்ளனர்.ஒடிசா மாநிலம் Mahakapara பகுதியில் இருக்கும் Tantiapalli கிராமத்தைச் சேர்ந்தவர் Sabitri Parida (27).

இவரும் Srirampur கிராமத்தைச் சேர்ந்த Monalisa Nayak (28) கட்டாகில் இருக்கும் ஒரே பள்ளியில் படித்து வந்துள்ளனர்.பள்ளியில் படிக்கும் போது இருவரும் நண்பர்களாகினர். அதன் பின் கல்லூரி என ஒன்றாக படித்து வந்த இவர்கள், தனியார் நிறுவனம் ஒன்றிலும் ஒன்றாக வேலை பார்த்து வந்துள்ளனர்.

இணைபிரியா தோழிகளான இருவரும் கட்டாக்கில் தனியாக வாடகைக்கு வீடு எடுத்து தங்கி இருந்து வந்தனர்.நண்பர்களாக இருந்த இவர்களுக்குள் காதல் மலர்ந்தது. இதனால் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர்.

வழக்கறிஞர் முன்னிலையில் பதிவு திருமணம் செய்து கொண்டனர்.சமீபத்தில் நீதிமன்றம் ஓரினச்சேர்க்கை தவறில்லை என்று தீர்ப்பளித்துள்ளதால், கடந்த சனிக்கிழமை இருவரும் வழக்கறிஞர் முன்னிலையில் பதிவு திருமணம் செய்து கொண்டனர்.

பெண்கள் இரண்டு பேரும் திருமணம் செய்து கொண்ட சம்பவம், அவர்களது பெற்றோருக்கு தெரியவர, அதிர்ச்சியடைந்துள்ளனர். அதன் பின் இருவரையும் அவர்கள் பிரிக்க முயன்றதாக கூறப்படுகிறது.இந்நிலையில் எங்களை பிரிக்க முயன்றால் ஒன்றாக தற்கொலை செய்து கொள்வோம் என்று அந்த பெண்கள் மிரட்டல் விடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.