ஒரு நிமிடம் இது நயன்தாரா தான் என குழம்பிய ரசிகர்கள்..! நயன்தாரா போல மாறிய நடிகை அனிகா! வைரலாகும் புகைப்படம் இதோ

தல அஜித்துடன் என்னை அறிந்தால் படத்தில் அவருக்கு மகளாக நடித்து தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை அனிகா. இதையடுத்து மீண்டும் அஜித்தின் மகளாக விஸ்வாசம் படத்தில் நடித்து பெரும் வரவேற்பை பெற்ற இவர் பின்பு பெரிய பெண்ணாக மாறியுள்ளார். இந்த படத்தில் இருவருக்கும் இடையே இருந்த அப்பா, மகள் செண்டிமெண்ட் காண்போரை மெய்சிலிர்க்க வைத்தது. தமிழ் மற்றும் மலையாள மொழி படங்களில் நடித்து வருகிறார் நடிகை அனிகா.

தற்போது ஒரு சில படங்களில் கதாநாயகியாக கமிட்டாகி உள்ளார். அவ்வப்போது பயங்கர போஸ் கொடுத்து போட்டோஷுட் எடுத்து தனது வலைத்தளங்களில் வெளியிட்டு வருகின்றனர். சமீப காலமாக முன்னணி நடிகைகளை போலவே சிலர் தங்களது முகங்களை மேக்கப் மூலம் வடிவமைத்து அதனை சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு வைரல் ஆகி வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது அஜித்துடன் இரு படங்கள் மகளாக நடித்து 15 வயது இளம் நடிகை அணிகா சில போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதில் பார்ப்பதற்கு அப்படியே அச்சு அசல் நடிகை நயன்தாரா போலவே தெரிகிறார் நடிகை அணிகா. மேலும் இந்த புகைப்படத்தை பார்த்த பலரும் ஒரு நிமிடம் இது நயன்தாரா தான் என்று நம்பிவிட்டனர். இதோ அந்த புகைப்படம்…

Leave a Reply

Your email address will not be published.