பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சிக்கு நாளுக்கு நாள் ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் தினம்தோறும் வெளியாகி வரும் ப்ரோமோக்களும் ஆர்வத்தை தூண்டி வருகிறது. கடந்த சில நாட்களாக சண்டை இருந்த நிலையில் இப்போது போட்டிகள் நடந்து வருகிறது. அண்மையில் இந்த நிகழ்ச்சியின் 17வது போட்டியாளராக தொகுப்பாளினி அர்ச்சனா வீட்டிற்குள் நுழைந்துள்ளார்.

பிக் பாஸ் வீட்டில் அர்ச்சனாவின் வரவால் கலப்பாக மாறியுள்ளது. தொகுப்பாளினி அர்ச்சனா வீட்டிற்கு வந்ததுமே சுரேஷ் சக்ரவத்தி அவர்களை கலாய்த்து பல கலாட்டாக்களை செய்து வருகிறார். அடுத்தடுத்து நிறைய போட்டிகள், சண்டைகள் என பிக்பாஸ் வீடே பரபரப்பாக இருக்கிறது. இந்த நிலையில் பிக்பாஸ் பிரபலங்களுக்கு ஒரு நாளைக்கு எவ்வளவு சம்பளம் என்ற விவரம் ஒன்று சமூக வலைதளங்களில் சுற்றி வருகிறது.
இதோ அந்த விவரம், ரம்யா பாண்டியன், ஆரி, ஜித்தன் ரமேஷ், அறந்தாங்கி நிஷா, ஷிவானி, ரியோ ராஜ் அனைவருக்கும் ரூ. 2 லட்சம். சனம் ஷெட்டி, சம்யுக்தா கார்த்திக், சுரேஷ் சக்ரவர்த்தி, பாலாஜி முருகதாஸ், வேல்முருகன் ஆகியோருக்கு ரூ. 1ல் இருந்து 1.5 லட்சம் சம்பளமாம். அனிதா சம்பத், கேப்ரியலா, சோம சேகர், ஆஜீத் ஆகியோருக்கு ரூ.1 லட்சம் என்கின்றனர்.