தமிழ் சினிமாவில் தேவர்மகன் என்ற படத்தின் மூலம் குழந்தைநட்சத்திரமாக அறிமுகமானவர் நீலிமா ராணி. இதனையடுத்து, தம், மொழி, ராஜாதி ராஜா, சந்தோஷ் சுப்பிரமணியம், நான் மகான் அல்ல என ஏராளமான படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.இதன்பின், பல முன்னணி தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் எக்கச்சக்கமான சீரியல்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். மேலும், இவருக்கு 21 வயதிலேயே திருமணம் செய்து விட்டார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இவர் திருமணம் ஆனாலும் தொடர்ந்து தொடர்களிலும், சினிமாக்களிலும் நடித்து கொண்டு தான் இருக்கிறார். இதனிடையே, சமூக வலைத்தளங்களில் பிசியாக இருக்கும் நீலிமா அவ்வப்போது வித்தியாசமான போட்டோசூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வருவார்.அந்தவகையில், அவர் சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார். அப்பொழுது நபர் ஒருவர், ஒரு நைட்க்கு எவ்ளோ என்று மோசமாக கேட்டுள்ளார்.
அதற்கு நீலிமா, கொஞ்சம் நாகரீகத்தை எ திர்பார்க்கிறேன். மற்றவர்களை கேவலமாக பேசுவது வக்கிர புத்தி. தயவு செய்து மனோதத்துவ மருத்துவரை பாருங்கள் என்று நெத்தியடி பதிலளித்துள்ளார்.