சமூக வலைத்தளங்களில் ஹாட் டாபிக்காக இருப்பது பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்து தான். உலகநாயகன் கமல்ஹாசன் முன்னிலையில் பிரமாண்டமாக துவங்கப்பட்டது பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி. இதில் பல தெரிந்த பிரபலங்களும் சில தெரியாத பிரபலங்களும் பங்குபெற்று நிகழ்ச்சி மிக விறு விறுப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது. பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்து ஒரு வாரமே ஆனா நிலையில் பல சண்டைகள், பிரச்சினைகள் நடந்தன.
முதலில் அனிதா சம்பத் மற்றும் சுரேஷ் சக்ரவர்த்தி இடையே மோதல் ஆரம்பித்தது. அதன் பின்னர் சனம் ரேகா இடையே பிரச்சனை. அதனைத் தொடர்ந்து பாலாஜி முருகதாஸ் சனம் இடையே மோதல். பிக்பாஸ் வீட்டில் கடந்த வாரத்தில் நடந்த பிரச்சினைகள் என அனைத்திற்கு சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் கமல் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். மேலும் நேற்றைய தினத்தில் அதிக ஹார்ட் பிரேக் வாங்கிய சுரேஷ் சக்கரவர்த்தி இந்த வாரத்திற்கான வீட்டின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
எதற்கெடுத்தாலும் கோபப்படும் சுரேஷ் இந்த வாரத்தில் வீட்டின் தலைவராக இருப்பதால் பிக்பாஸ் மகிவும் பரபரப்பாக செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இந்நிலையில் இந்த வாரத்திற்கான நாமினேஷன் நடைபெறுகின்றது. இதில் அதிகமான போட்டியாளர்கள் சனம் மற்றும் ஷிவானியின் பெயரைக் கூறியுள்ளனர்.