ஐஸ்வர்யாராய்க்கு இவ்வளவு பெரிய மகளா? உலக அழகியையே மிஞ்சும் அழகு! வெளியான புகைப்படம்

நடிகை ஐஸ்வர்யா ராய் தமிழில் சில படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் ரசிகர்களால் மறக்கமுடியாத நடிகையாக இருந்து வருகிறார். பிரசாந்துடன் ஜீன்ஸ், அஜித்துடன் கண்டு கொண்டேன் கண்டுகொண்டே, விக்ரமுடன் ராவணன், ரஜினியுடன் எந்திரன் என அவரின் படங்கள் இன்றும் ரசிக்கப்படும் ஒன்று. நடிகர் அமிதாப்பச்சனின் மகனான அபிஷேக் பச்சன் மற்றும் ஐஸ்வர்யா ராய் ஆகியோர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர்.

அதன் பின்னர் பாலிவுட் சினிமாவின் மெகா ஸ்டார் நடிகர் அமிதாப் பச்சனின் மருமகளாவும், நடிகர் அபிஷேக் பச்சனின் மனைவியாகவும் சினிமாவில் மிகுந்த முக்கியத்துவம் பெற்றார். திருமணத்திற்கு பிறகு படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்த ஐஸ்வர்யாராய் இடையில் அவ்வப்போது சினிமாவில் தோன்றி வந்தார். அதுமட்டுமல்லாமல் ஃபேஷன் ஷோ நிகழ்ச்சிகளில் அடிக்கடி தென்படுவார். இவர்கள் இருவருக்கும் அழகான பெண் குழந்தை உள்ளது.

இந்நிலையில் நடிகர் அபிஷேக் பச்சன் தனது பிறந்தநாளை அவரின் மனைவி ஐஸ்வர்யா ராய் மற்றும் மகள் ஆராத்யா உடன் கொண்டாடியுள்ளார். தற்போது அந்த புகைப்படம் வெளியாகி இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. தற்போது அந்த குழந்தை உலக அழகி ஐஸ்வர்யா ராயை விட மிகவும் அழகாக உள்ளது. இதோ அந்த புகைப்படம்..

Leave a Reply

Your email address will not be published.