ஏ.ஆர்.ரகுமான், சுஷாந்த் பற்றி நெஞ்சார்ந்த பதிவை வெளியிட்டுள்ளார்..!!

சுஷாந்த் சிங் ராஜ்புத் பாலிவுட்டில் பிரபல முன்னணி நடிகர்களில். இவர் தொலைக்காட்சி சீரியல்களில் தனது வாழ்க்கையைத் தொடங்கினார். சமீபத்தில் பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தன்னுடைய வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் இந்தியா முழுவதும் பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதற்கு இவர் மன அழுத்தத்தின் காரணமாக இறந்தார் என்று கூறப்படுகின்றது.

இவர் மரணத்திற்கு பல பிரபலங்கள் தங்கள் இரங்கலை தெரிவித்தனர். இந்த வழக்கை விசாரித்து வரும் போலீசார் இதுதொடர்பாக சுஷாந்த் சிங்கின் காதலி உட்பட சுமார் 30 பேருக்கும் அதிகமானோரை விசாரித்து வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர். அவர் என்ன காரணத்தால் தற்கொலை செய்து கொண்டார் என்பது இன்னும் மர்மமாகவே உள்ளது. இந்நிலையில் இவர் நடிப்பில் உருவான தில்பாச்சரே படம் தற்போது OTT ல் வெளிவர உள்ளது.

இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியானது. வெளியான ஒரு நாட்களுக்குள்ளேயே இந்த படம் உலக சாதனையை படைத்துள்ளது. பல வெற்றி படங்களில் ரெக்கார்ட் முறியடித்துள்ளது அவெஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி வார் போன்ற படங்களின் ரெக்கார்டுகளை முறியடித்துள்ளது. இதற்கு ரகுமான் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த வெற்றி ரசிகர்களின் அன்பு மழை போல் உள்ளது என பதிவிட்டுள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published.