ஏழை மாணவியின் பேச்சால் மேடையிலேயே மனமுருகி கண்ணீர் விட்டு அழுத நடிகர் சூர்யா..! அனைவரையும் சோகத்தில் ஆழ்த்திய நிகழ்வு…!

நடிகர் நடிகைகள் நடிப்பிற்கு அப்பால் பல வித நல்லா விஷயங்களை செய்து வருகிறார்கள். அந்த வரிசையில் நடிகர் சூர்யா முன்னாள் தான் உள்ளார் என்று கூற வேண்டும். அவர் ஆற்றும் நற்பணி நாம் அனைவரும் நன்கு அறிந்த ஒன்றே.. சமுதாயத்தில் பின்தங்கியுள்ள பகுதிகள் மற்றும் கிராமப்புறங்களை சார்ந்த மாணவ மாணவியர்களுக்குத் தரமான கல்வியை கொடுக்கும் நோக்கத்தில் அகரம் அறக்கட்டளையை நடிகர் சூர்யா நடத்தி வருகிறார். இந்நிலையில், அகரம் அறக்கட்டளை சார்பில் “வித்தியாசம்தான் அழகு” , “உலகம் பிறந்தது நமக்காக” என்ற இரண்டு நூல்கள் வெளியீட்டு விழா சென்னையில் நடைப்பெற்றது.

இந்த நூல் வெளியீட்டு விழாவில் அகரம் அறக்கட்டளை நிறுவனரும் நடிகருமான சூர்யா, பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் ராம்ராஜ் நிறுவனர் நாகராஜ் மற்றும் தொழிலதிபர்களும் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியில், மேடையில் அகரம் அறக்கட்டளையில் சேர்ந்து படித்து வரும் மாணவி ஒருவர் தான் வாழ்க்கையில் பட்ட கஷ்டங்களை குடும்ப சூழ்நிலைகளையும் பேசினார்.

இதை கேட்ட நடிகர் சூர்யா மேடையில் கண் கலங்கியவாறு 10 நிமிடம் கண்ணீர் விட்டு அழுதார். பின்னர் மாணவிக்கு தட்டி கொடுத்து ஆறுதல் கூறினார். இந்த சம்பவம் வந்திருந்த பலரையும் சோகத்தில் ஆழ்த்தியது. நடிகர்கள் சிலர் இப்படிப்பட்ட நல்ல காரியங்களை செய்வது மக்களுக்கு ஒரு நல்ல எண்ணத்தை அவர்கள் மீது தோன்ற காரணமாக உள்ளது என்று தான் கூறவேண்டும்.

Leave a Reply

Your email address will not be published.