தமிழ் சினிமாவின் ஜாம்பவான்களில் ஒருவர் எஸ்.பி.பி கடந்த 25ம் திகதி சிகிச்சை பலனின்றி காலமானார். தனது காந்த குரலினால் உலக மக்களைக் கட்டிப்போட்டு வைத்த பாடகர் எஸ்.பி.பி. மேலும் இவர் மக்கள் சொத்து என்றும் நினைவு இல்லம் கட்டவும் அவரது குடும்பத்தினர் திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில் எஸ்பிபி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் போது, தனக்கு மரியாதை செலுத்தும் விதமாக அணியப்படும் சால்வையை அவர் என்ன செய்தார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து முன்பே எஸ்பிபி சுவாரசியமான தகவலை வெளியிட்டுள்ளது தற்போது பெரும் பேச்சுப் பொருளாக இருந்து வருகின்றது. ஒருமுறை அவரிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையில், என்னை கௌரவிக்கும் பொருட்டு நீங்கள் அணியும் சால்வைகளை விற்று காசாக்குவதில் என்றும் ஆனால் அதனை நான் என்ன செய்கிறேன் என்பதை உங்களிடம் கூறுவது எனது கடமையாக கருதுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
சென்னை மற்றும் ஹைத்ராபாத் நகரங்களில் மாலை நேரத்திற்கு பின்பு, நூற்றுக்கணக்கான சால்வைகளை எடுத்துக்கொண்டு தனது ஓட்டுநருடன் காரில் நகர்உலா புறப்பட்டு, சாலை ஓரங்களில் வசிப்போருக்கு அதனை வழங்கிவருவதாக அவர் கூறியுள்ளார். பாடலில் மட்டுமல்ல மனிதாபிமானத்திலும் எஸ்பிபி எப்போதும் ஸ்பெஷல் தான் என்பதை இந்நிகழ்வு காட்டுகின்றது என்றும் அவரது பெயர் மட்டுமின்றி அவரது மனமும் பால் போன்று வெண்மையாகவும், தூய்மையாகவும் இருந்தது என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.