பிரபல பின்னணி பாடகரான எஸ்.பி.பாலசுப்ரமணியம் கொரோனா தொற்று உறுதியானதால் கடந்த 5-ஆம் திகதி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். எஸ்.பி. பாலசுப்பிரமணியம் எப்படி இருக்கிறார் என்பதை தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கும் இசை ரசிகர்களுக்காக அவரின் மகன் சரண் தினமும் அப்டேட் கொடுத்து வீடியோ வெளியிட்டு வருகிறார்.

இன்றைய தினம் வெளியிட்ட காணொளியில் சரண் கூறியிருப்பதாவது, மதியம் மருத்துவமனைக்கு சென்று அப்பாவுக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவக் குழுவை சந்தித்து பேசினேன். நேற்று முன்தினம் நான் அவரை சந்தித்தபோது இருந்ததை விட இன்று அப்பாவின் நிலைமை எவ்வளவோ தேறியுள்ளது. மயக்க மருந்து இல்லாமல் அவர் சௌகரியமாக இருக்கிறார். அப்பா குணமடைவதில் முதல் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது மருத்துவர்களுக்கு மகிழ்ச்சி அளித்துள்ளது.
நேற்று முன்தினம் பார்த்ததை விட இன்று அப்பா நன்றாக கண் திறந்து பார்த்தார். இந்த வாரத்தில் அவர் எழுத்து மூலம் என்னுடன் பேசுவார் என்று நம்புகிறேன். அப்பாவுக்கு செய்தித்தாளை தினமும் வாசிக்குமாறு மருத்துவமனை நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளேன். அப்பா பாடல்களை கேட்டுக் கொண்டிருக்கிறார். அவர் பாட முயற்சி செய்கிறார். நான் ரொம்ப சந்தோஷமாக இருக்கிறேன். என் அப்பாவுக்காக பிரார்த்தனை செய்து கொண்டிருக்கும் அனைவருக்கும் நன்றிக்கடன் பட்டிருக்கிறோம்.
View this post on Instagram