எஸ்பிபி நிறைய குறும்பு செய்வான்.. குழந்தை மாதிரி! கண்ணீர்மல்க பேட்டியளித்த பாடகி ஜானகி..!

தனது காந்த குரலினால் உலக மக்களைக் கட்டிப்போட்டு வைத்த பாடகர் எஸ்பிபி கடந்த 25ம் திகதி சிகிச்சை பலனின்றி காலமானார். அவரது குரல்கள் சமூகவலைத்தளங்களில் ஒலித்துக்கொண்டே இருக்கின்றது. மேலும் ரசிகர்கள் பலரும் தங்கள் வருத்தத்தை கண்ணீராக வெளிப்படுத்தியும் வருகின்றார். மேலும் எஸ்பிபி மக்கள் சொத்து என்றும் நினைவு இல்லம் கட்டவும் அவரது குடும்பத்தினர் திட்டமிட்டுள்ளனர்.

மறைந்த பாடகர் எஸ். பி. பாலசுப்பிரமணியம் குறித்தும் அவருடன் பயணித்த நாட்களை குறித்து பிரபலங்கள் பலரும் தங்களது நினைவுகளை பகிர்ந்து வருகின்றனர். அந்தவகையில், மூத்த பாடகியும் எஸ். பி. பாலசுப்பிரமணியம் அவர்களை திரையில் பாட அறிமுகப்படுத்தியவருமான ஜானகி அம்மா எஸ்பிபி பேட்டி ஒன்றில் கூறியதாவது. எஸ்பிபி ஒரு குழந்தை சுபாவம் கொண்டவர் என்றும் என்னுடன் ரெக்கார்டிங்கில் இருக்கும் போதெல்லாம் நிறைய குறும்பு செய்துக்கொண்டே இருப்பார்.

மேலும், கடைசியாக ஐதராபாத்தில் கச்சேரிக்கு சென்று என் வீட்டிற்குவந்து சாப்பிட்டு என் மகன்களுடன் நேரத்தை செலவிட்டு சென்றான். அதன் பிறகு தான் உடல்நிலை சரியில்லாமல் போனது. ஹாஸ்பிடல்ல இருந்த அந்த 50 நாள் குழந்தை எவ்வளவு கஷ்டப்பட்டானோ பாவம். கடைசியில் நம்ம எல்லாரையும் விட்டுட்டு போயிட்டான். அவரது ஆத்மா சாந்தியடையட்டும் என கண்ணீர் மல்க கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.