பிக் பாஸ் வீட்டில் கடந்த வாரம் ஆடலும் பாடலும் நிகழ்ச்சி நடந்த நிலையில், இந்த வாரம் ஃபேஷன் டிரெஸ் காம்பெட்டிஷன் போல நாடக டாஸ்க் அரங்கேறியது. நாடா? காடா? என்ற இந்த டாஸ்க்கில் இரண்டு குழுக்கலாக பிரிந்து போட்டியாளர்கள் அனைவரும் ரணகலப்படுத்தியிருந்தனர். இதில் சுரேஷ் செய்த சேட்டைகளுக்கு அளவே இல்லை. நேற்றைய நிகழ்ச்சில் பாலாஜி, சோம் சேகர் ஆகியோர் அரக்கர்களிடம் தோற்று விட்டார்கள்.
சனம் ஷெட்டி, சம்யுக்தா, ரியோ ஆகியோர் வெற்றி பெற்றனர். அரக்கர்களிடம் சிக்கி சின்னாப்பின்னமான போட்டியாளர்களின் நிலை மிகவும் பரிதாபமாக இருந்தது. அதுவும் குறிப்பாக ரியோவின் நிலை படு மோசமாக இருந்தது. இன்னும் ரம்யா, நிஷா, வேல்முருகன் மட்டும் இந்த டாஸ்கில் ஆடாமல் இருக்கின்றனர். எது எப்படி போனாலும் நிகழ்ச்சி ரசிகர்களுக்கு விருந்து கொடுத்திருந்தது என்று தான் கூற வேண்டும்.
இப்படி ஒரு நிலையில் இன்றைய முதல் ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் அரக்கர்கள் ராஜாவாகவும், ராஜாக்கள் அரக்கர்களாகவும் மாறியுள்ளார்கள். மேலும், ஆரி அரசராக இருந்து, அரக்கர்கள் பண்ணும் தொல்லையை பொறுத்துகொள்ள ஒரு கட்டத்தில், பொங்கி எழுந்து இப்படி விளையாடுவதற்கு வேற ஏதாவது பண்ணலாம் என கூறுகிறார். இதனால் சண்டை வழுப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.