எலுமிச்சை சாறில் உப்பு கலந்து குடிப்பதால் இவ்வளவு நன்மைகள் நடக்குமா? இனி தெரிஞ்சுட்டு குடியுங்கள்..

மனிதர்களுக்கு ஏற்படும் எல்லாவித நோய்களையும் குணமாக்கும் நிவாரணியாக எலுமிச்சை விளங்குகிறது. எலுமிச்சையில் அதிக கால்சியம், ஃபோலிக் அமிலம் மற்றும் சிட்ரிக் அமிலம் உள்ளது. இது தாகத்தைப் போக்க உதவும் பானமாகவும் மற்றும் பலவித மருத்துவக் குணங்கள் நிறைந்துள்ள பழமாகவும் உள்ளது. எலுமிச்சை பழத்தைப் போல எலுமிச்சை பழத்தின் தோலிலும் ஏராளமான நன்மைகள் உள்ளது. எலுமிச்சை சாறில் உப்பு கலந்து குடிப்பதால் உடலில் வலி, எரிச்சல் மற்றும் வீக்கம் போன்றவற்றைக் குறைக்கவும் உதவுகிறது. அதோடு வைட்டமின் சி குறைபாட்டை குறைக்கவல்லது.

வைட்டமின் சி நிறைந்த உணவுகளில் முதன்மையான இடத்தில் இருப்பது எலுமிச்சையை . இது நோயெதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கும் தன்மை கொண்டது. எலுமிச்சை சாறில் சிறிது உப்பு கலந்து குடிப்பதால் அஜீரணக் கோளாறுகள் நீங்கும். ஜீரண சக்தியை மேம்படுத்தும். மெட்டபாலிசத்தை அதிகரிக்கச் செய்து, உடலில் தேங்கும் தேவையற்ற கொழுப்பைக் கரைக்கும் வேலையைச் செய்கிறது. பலரும் இரவில் படுத்ததும் சரியாக தூக்கம் வராமல் அவதிப்படுகிறார்கள்.

எலுமிச்சை சாறில் உப்பு கலந்து இரவு தூங்கும்முன் குடித்து வந்தால், நரம்பு மண்டலம் தூண்டப்பட்டு படித்து கொஞ்ச நேரத்திலேயே நல்ல உறக்கம் வரும். உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுவதில் எலுமிச்சை நீர் மிகச் சிறப்பாகச் செயல்படும். இது நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்த பலனைத் தரக்கூடியது. குழந்தைக்காக முயற்சி செய்யும் தம்பதிகள் இரவு நேரத்தில் எலுமிச்சை சாறுடன் இஞ்சி கலந்து குடித்து வரலாம். தொடர்ந்து இந்த பானத்தைப் பருகி வந்தால் இயற்கை முறையில் ஆண், பெண் இருவருக்கும் கருவளத்தை ஊக்குவிக்கும் ஆற்றலைக் கொடுக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!