நடிகைகள் சினிமாவில் என்ன செய்கிறார்களோ அதேபோல் தான் பொது வாழ்விலும் செய்கிறார்கள் போல என நினைத்து அது பற்றிய கேள்விகளை ரசிகர்கள் கேட்பது வழக்கம் தான். இது போன்ற சூழ்நிலை சீரியல் நடிகைகளுக்கு தான் அதிகமாக நடக்கும். அவர்களின் சீரியல் கதாபாத்திர பெயரில் தான் பெரும்பாலானோர் அழைப்பர். அப்படி தான் தற்போது நாயகி சீரியலில் கதாநாயகி ஆனந்தி வேடத்தில் நடிக்கும் வித்யா ப்ரதீப், கல்யாணம் ஆவதற்கு முன்பு எப்போது திருமணம் என்று தான் கேட்டார்கள். அது ஓரளவுக்கு மரியாதையாக தான் இருந்தது.
ஆனால் தற்போது திருமணம் முடிந்துவிட்டதால் எப்போது சாந்தி முகூர்த்தம் என்று கேட்க ஆரம்பித்துவிட்டனர். அதுவும் கூட்டமாக இருக்கும் பொது நிகழ்ச்சிகளில் ரசிகர்கள் இவ்வாறு கேட்கும்போது என்ன சொல்வது என்றே தெரியவில்லை என்றார்.
