தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் தல அஜித். தமிழ் சினிமா ரசிகர்களால் தல என்று கொண்டாடப்படும் நடிகர் அஜித். தல படம் வந்தாலே தியேட்டரே திருவிழா கோலமாகும். கடந்த வருடம் இவர் நடிப்பில் நேர்கொண்ட பார்வை, விஸ்வாசம் ஆகிய படங்கள் வெளிவந்தது. இவர் தற்போது நடித்து வரும் படம் வலிமை. இப்படத்தை இளம் இயக்குனரான எச். வினோத் இயக்கி வருகிறார்.
இந்திய சினிமாவில் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவரான போனி கபூர் நேர்கொண்ட பார்வை படத்தை தொடர்ந்து இப்படத்தை அஜித்தை வைத்து இயக்கி வருகிறார். கொரோனா தாக்கம் காரணமாக தள்ளி வைக்கப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு, தற்போது தமிழக அரசு அறிவித்துள்ள தளர்வுகளின் கிழ் முறையான நடைமுறையில் நடைபெற்று வருகிறது. இப்படத்திற்கு முன்னணி இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார்.
யுவன் இசையில் அஜித்தின் மாஸ் நடிப்பு எனபதால் இப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருக்கிறது. தல அஜித்தின் பழைய புகைப்படங்களை அவ்வப்போது நாம் சமூக வலைத்தளங்களில் பார்த்திருப்போம். இந்நிலையில் தல அஜித் தனது திரைவாழ்வை எப்படி ஆரம்பித்தார், இப்போது எப்படி இருக்கிறார் என புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.
TRANSFORMATION LEVEL??#Valimai #VedalamReReleaseInMALAYSIA
pic.twitter.com/cPsqZ0uCny— ACTOR AJITH FANS CLUB (@ActorAjithFc_) October 5, 2020