என் மனைவியை விவாகரத்து செய்துவிடேன்..!! கனா காணும் காலங்கள் சீரியலில் நடித்த ஜோ உருக்கம்..!! என் காதலர் தின பரிசு தான் விவாகரத்து நோட்டீஸ்..!!

தொலைக்காட்சிகளில் பல விதமான தொடர்கள் வந்தாலும் பள்ளி கல்லூரி போன்றவை மூலம் வெளியாகும் தொடர்களை நாம் மறக்க முடியாது. அது போன்ற ஒரு தொடர் தான் காண காணும் காலங்கள் சீரியல்.. கனா காணும் தொடரின் மூலம் பிரபலமானவா் யுதன் பாலாஜி. பலா் இந்த தொடரின் மூலம் பிரபலமடைந்துள்ளனா். இந்த தொடரில் நடித்தவா்கள் வெள்ளித்திரையிலும் நடித்துள்ளனா். காதலா் தினமான நேற்று யுதன் பாலாஜி தன் மனைவியை விவாகரத்து செய்துள்ளார். வித்தியாசமான நாடகமான கனாகாணும் காலங்கள் 2006 முதல் 2008 வரை ஒளிப்பரப்பாகி ரசிகா்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்றது. இந்த தொடரில் நடித்த யுதன் பாலாஜி சினிமாவில் பட்டாளம், நகர்வலம், காதல் சொல்ல வந்தேன் போன்ற படங்களில் நடித்தார்.

பாலாஜி கடந்த 2016-ல் ப்ரீத்தி என்பவரை திருமணம் செய்தார். இவா்கள் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி மனஸ்தாபங்கள் ஏற்பட்டது. கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். இந்நிலையில் கடந்த 2018ஆம் ஆண்டு காதலர் தினத்தில் மனைவி அதிகாரபூர்வமாக பிரிவதாக பாலாஜி அறிவித்தார். இது குறித்து அவர் கூறுகையில், எப்போதும் போல காலையில் எழுந்தேன். கோர்ட்டிற்கு சென்றேன். விவாகரத்து கிடைத்தது.

இப்படி கடவுள் எனக்கு வித்தியாசமான பிளானை போட்டு இருக்கிறார்.உங்களுக்கு காதலர் தின வாழ்த்துகள் என அப்போது சோகத்துடன் கூறியிருந்தார். இந்து விஷயம் அவர்களது ரசிகர்களுக்கு சற்று சோகமாக தான் உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!