“என் கணவர் தன் எல்லாத்துக்கும் காரணம்”, “அவர் கூட ஏற்பட்ட நட்பால மாற்றம்”..! தெறி, ரெமோ போன்ற படங்களில் அழகான அம்மாவாக கலக்கிய கல்யாணி ஷேரிங்ஸ்..!!

நான் அம்மா ரோல்ல நடிச்சு பெயர் வாங்குவேன்னு கனவிலும் நினைச்சுப் பார்த்ததில்லை. அதெல்லாம் நிஜமாகி இருக்கிறதைப் பார்த்தால், சந்தோஷமா இருக்கு” – உற்சாகமாகப் பேசுகிறார் நடிகை கல்யாணி நடராஜன். ‘சைவம்’, ‘ஒரு நாள் இரவில்’, ‘ரெமோ’ எனப் பல படங்களில் அம்மா ரோலில் நடித்து அசத்தியவர். அவர் அளித்த பேட்டியில், மும்பையில், டிராமா நடத்தும் தமிழ்க் குடும்பங்கள் நிறைய இருக்காங்க. பத்து வருஷங்களுக்கு முன்னாடி கிடைச்ச அவங்களின் நட்பினால், மேடை நாடகங்களில் நடிக்க ஆரம்பிச்சேன். ஆரம்பத்துல தயக்கமா இருந்துச்சு. ‘உனக்குப் பிடிச்சிருந்தா தைரியமா செய்’னு கணவர் என்கரேஜ் பண்ணார்.. அப்படி ஆரம்பிச்ச பயணத்துல நடிப்பில் ஆர்வம்கொண்ட கணவரும் டிராமாவில் பெர்ஃபார்ம் பண்ண ஆரம்பிக்க, தம்பதியரா கலக்க ஆரம்பிச்சோம்.

என் டிராமா நடிப்பைப் பார்த்து, ‘சேட்டை’ படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைச்சுது. அடுத்து, ‘சைவம்’ படத்துக்காக ஒரு மாசத்துக்கும் மேல காரைக்குடியில் தங்கினேன். சினிமா ஃபீல்டு பற்றி நிறைய அனுபவம் கிடைச்சுது.‘ஒரு நாள் இரவில்’ படத்தில் சத்யராஜ் மனைவியா நடிச்சது நல்ல ரீச் கொடுத்துச்சு.  ‘தெறி’, ‘ரெமோ’, ‘குற்றம் 23’ எனத் தொடர்ந்து பல படங்கள். சில தெலுங்கு மற்றும் ஒரு இந்தி படத்திலும் நடிச்சுட்டேன். ‘தமிழ் சினிமாவின் புது க்யூட் அம்மா’ எனப் பலரும் சொல்லி உற்சாகப்படுத்துறாங்க. இப்போ அதிகமா டெலிகாஸ்ட் ஆகுற ஓடோனில் விளம்பரம் மட்டும் நெகட்டிவ் மாதிரியான ரூபம் ( சிரிக்கிறார்).

சினிமா, விளம்பரம் என நிறைய நடிச்சாலும், டிராமாவில் நடிக்கும்போது பெரிய திருப்தி கிடைக்குது. . ‘மும்பையில் வசிச்சாலும், தமிழை மறந்திடக்கூடாது’னு சொல்லிட்டே இருப்பாங்க என கூறுகிறார் நடிகை கல்யாணி நடராஜன் .

Leave a Reply

Your email address will not be published.