என் கணவர் எப்படிப்பட்டவர்? பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட நபரின் மனைவி பரபரப்பு பேட்டி

பொள்ளாச்சி பாலியல் பலாத்கார வழக்கில் சிக்கிய 4 பேரில் ஒருவரின் மனைவி தனது கணவருக்கும் இந்த வழக்குக்கும் தொடர்பில்லை என கூறியுள்ளார்.  பொள்ளாச்சியில் மர்ம கும்பலால் 100-க்கும் மேற்பட்ட பெண்கள் பலாத்காரம் செய்யப்பட்டு வீடியோ எடுக்கப்பட்ட சம்பவம் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இது தொடர்பாக பொலிசார் திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார் ஆகிய நால்வரை கைது செய்துள்ளனர். இந்த நான்கு பேரில் ஒருவரின் மனைவி தனது கணவருக்கும்.

இந்த வழக்குக்கும் எந்த தொடர்பும் இல்லை என கண்ணீர் மல்க பேட்டியளித்துள்ளார். அவர் கூறுகையில், இந்த வழக்கு பொய்யாக போடப்பட்டுள்ளது, இதை எப்படி நிரூபிப்பது என தெரியவில்லை. என்னுடைய மாமனாரும், மாமியாரும் நோய்வாய்ப்பட்டவர்கள். எனக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்,

என் கணவரை விட்டால் எங்களுக்கு வேறு ஆதரவே கிடையாது. இது குறித்து சரியாக விசாரிக்க வேண்டும், சிறையில் என கணவருக்கு எதாவது ஆபத்து ஏற்பட்டால்

தமிழக அரசு தான் பொறுப்பு. என் கணவர் மது கூட அருந்த மாட்டார், வேண்டுமானால் மருத்துவ பரிசோதனை செய்து பாருங்கள் என கதறியபடி கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.