என் அப்பாவின் உயிர்க்காக கிளாமராக நடித்தேன்! மனம் உருக்கத்துடன் பேசிய பிரபல சின்னத்திரை நடிகை!!!

சின்னத்திரை நடிகை நீபா பேசியது “நடிப்பு என்பது யார் கூட நடிக்க சொன்னாலும் நான் நடிப்பேன். ஆனால் எனக்கு ஒரு சிறிய கோரிக்கை உள்ளது. நான் இதை எல்லா interviewகளிலும் சொல்லிக்கொண்டு வருகிறேன். அது என்னவென்றால் கவர்ச்சியாக நடிப்பவர்களை தவறாக எண்ணவேண்டாம். அந்த நடிகைகள் எந்த கஷ்டமான சந்தர்ப்பத்தில் நடித்திருப்பார்கள் என்று இவர்களுக்கு தெரியாது. ஆனால் இவர்கள் தவறாக பேசி விட்டு போய் விடுகிறார்கள்.

மேலும்,  தற்போது திரையுலகில் கவர்ச்சி என்பது முன்னணி நடிகைகளே செய்ய துவங்கி விட்டனர். முன்னணி நடிகைகளை தவறாக கமெண்ட் செய்கிறார்களா என்று தெரியவில்லை. ஆனால் என்னை போல் இருக்கும் நடிகைகள் கவர்ச்சியாக நடித்தால் தவறாக பேசுவது மிக வருத்தமாக இருக்கிறது. நீங்கள் போடும் அந்த ஒரு கமெண்ட் அவர்களை மட்டும் பாதிக்காது அவர்களின் குடும்பத்தையும் சேர்த்து பாதிக்கும். இப்போ நான் அந்த கமெண்டை படிப்பேன் பிறகு எனது கணவர் படிப்பார் பின்பு என் குழந்தைகள் படிப்பார்கள் அது எந்த அளவிற்கு அவர்களுக்கு துன்பத்தை தரும் என்று உங்களுக்கு தெரியுமா”.

மேலும் அவர் கூறுகையில்  “நான் 2,3 படங்களுக்கு கவர்ச்சியாக நடித்தேன் ஏனென்றால் என் தந்தை கடைசி நிமிடம் மருத்துவமனை சிகிச்சைக்கு என்னிடம் காசு இல்லை. அந்த நேரத்தில் இந்த வேலை செய்தால் தான் எனக்கு காசு வரும். அதனால் தான் அந்த நேரத்தில் நான் அப்படி நடித்தேன். மேலும், இப்படி நடிப்பவர்களை பற்றி கமெண்ட் செய்பவர்கள் call girls என்று நினைத்து விடுகிறார்கள். ஆனால் அப்படி யாரும் கிடையாது. இதற்க்கு உதாரமாக நடிகை மும்தாஜ் அவர்கள் படத்தில் கவர்ச்சியாக நடித்திருப்பார்கள், ஆனால் பிக்பாஸில் எந்த அளவிற்கு அடக்க ஒடுக்கமாக இருந்தார்கள்.

Leave a Reply

Your email address will not be published.