என்ன எவ்வளோ எச்சரிச்சாங்க,, நான் கேட்கல..!! திட்டி தீர்க்கனும் இதுக்காக..!! பல வருடங்களாக இளமையாகவே இருக்கும் சீரியல் நடிகை கவிதா ஷேரிங்ஸ்..!!

20 வருடங்களாக சினிமா, சீரியலில் கலக்கி வருபவர் நடிகை கவிதா. அவர் அளித்த பேட்டியில், சினிமாவில் அறிமுகமானாலும் சீரியல்தான் கை கொடுத்தது. சன் டி.வி-யில ஒளிபரப்பான ‘சக்தி’ சீரியலில் ‘மேகா’ வாக அறிமுகமானேன். முதல் சீரியலிலேயே நல்ல பெயர் கிடைக்கவே 20 வருஷமாக சின்ன ‘பிரேக்’கூட எடுத்துக்க நேரம் இல்லாம தொடர்ந்து சீரியல் வாய்ப்பு வந்து கொண்டிருக்கிறது. இனிய இல்லத்தரசி சக்தியைத் தொடர்ந்து ‘கோலங்கள்’, ‘ஆனந்தம்’, ‘மருதாணி’னு நல்லபடியா போயிட்டிருக்கு என்றார். இயற்கையிலேயே நீளமான அழகான கூந்தல் கவிதாவிற்கு உண்டு. பின்னல் போடாமல் சீரியலில் நடிப்பது கவிதாவிற்கு கூடுதல் அழகைத் தரும்.

எப்படி இத்தனை அழகு என்று கேட்டால் வாரம் மூன்று முறை தலைக்கு குளிப்பாராம். மாதம் ஒருமுறை மருதாணி போடுவாராம். கவிதாவின் டிப்ஸ் ”தயிர், டீ டிகாக்ஷன், மருதாணி, பீட்ரூட் துருவல் எல்லாத் தையும் ஒரு முறை பயன்படுத்த தேவையான அளவுக்கு முதல் நாள் இரவே மிக்ஸ் செய்து வெச்சுடணும். மறுநாள் காலை அந்தக் கலவை யில முட்டையோட வெள்ளைக்கருவை மட்டும் (விரும்பினால்) சேர்த்து கூந்தல்ல தேய்ச்சு, மூணு மணி நேரத்துக்கு அப்புறம் அலசணும். இதுதான் பளபள கூந்தலின் ரகசியம் என்று டிப்ஸ் கூறி சிரித்தார் கவிதா.

என்னதான் கதாநாயகியாகவோ, நல்ல பாஸிட்டிவான கதாபாத்திரத்திலோ நடித்தாலும் ‘எல்லாரும் திட்டித் தீர்க்குற மாதிரி ஒரு வில்லி கேரக்டர் பண்ணணும்னு ஆசை. ஆனா, ‘அதெல்லாம் சரிப்பட்டு வராது’ன்னு தோழிகள் எச்சரிக்கிறாங்க. அதான், யோசனையாவே இருக்கு! என்றார். அது மாதிரி கிடைத்தால் நல்லா இருக்கும் என்றார்.

Leave a Reply

Your email address will not be published.