பிரபல தொலைக்காட்சியின் சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் பிரபலமானவர் கவின். அதன் பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களின் மனதில் நீங்க இடம்பிடித்தார் கவின். விஜய் தொலைக்காட்சியில் மிக பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இதில் பிக் பாஸ் 1 மற்றும் 3 சீனுக்கு ரசிகர்கள் அதிகம். மேலும் பிக்பாஸ் வீட்டில் இருக்கும்போது பல சர்ச்சைகளில் சிக்கிக்கொண்டது அனைவருக்கும் தெரிந்த விஷயமே.

சீரியலில் நல்ல பெயரை சம்பாதித்த கவின் பிக்பாஸில் வந்து கொஞ்சம் நிலை மாற தன் பெயரை கெடுத்துக் கொண்டார் என்றே கூறலாம். இப்போது அவர் பிக்பாஸ் தாக்கம் எல்லாம் ஓய்ந்து தனது சினிமா பயணத்தில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். தற்போது பட வாய்ப்புகளால் ரொம்ப பிஸியாகவே இருக்கிறார்.
சமீப நாட்களாகவே சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாகவே இருக்கும் கவின் தற்போது கொரோனா ஊரடங்கு உத்தரவால் தனிமையில் இருக்கும் புகைப்படங்களையும் இணையத்தில் பகிர்ந்து வருகிறார். இந்த நிலையில் கொரோனா லாக் டவுனுக்கு பிறகு புதிய லுக்கில் காணப்படுகிறார் கவின். அவர் லாக் டவுன் முன்பு அதன் பின் என புதிய புகைப்படம் ஒன்று வெளியிட்டுள்ளார். அதைப்பார்த்ததும் ரசிகர்களே லாக் டவுனில் என்ன இப்படி ஆகிவிட்டார் என கமென்ட் செய்கின்றனர்.