என்ன இப்படி மாறிட்டாரு நடிகர் ஷாம்-ஆ இது!! இணையத்தில் ட்ரெண்டாகும் புகைப்படம் இதோ..

12பி திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகர் ஷாம். முதலில் தளபதி விஜய்யுடன் குஷி திரைப்படத்தில் நடித்தார். மேலும் இவர் நடிப்பில் வெளியான இயற்கை, உள்ளம் கேட்குமே, லேசா லேசா உள்ளிட்ட திரைப்படங்கள் இவரை பிரபலமாகியது. தமிழ், தெலுங்கு மற்றும் கனடா மொழி படங்களிலும் நடித்துள்ளார் ஷாம்.

 

ஆறு மெழுகுவர்த்திகள் மற்றும் பொறம்போக்கு என்கிற பொது உடமை போன்ற படங்கள் இவருக்கு நல்ல வெற்றியை கொடுத்தது. தி கிரேட் ஃபாதர் மூலம் மலையாள சினிமாவில் அறிமுகமானார் ஷாம். நீண்ட கால இடை வேலைக்கு பிறகு ஷாம் 2019 ஆம் ஆண்டு காவியான் படத்தில் நடித்தார். ஷாம் காஷிஷ் என்னும் தனது கல்லூரி தோழியை திருமணம் செய்து கொண்டார். நடிகர் ஷாம் கடைசியாக பார்ட்டி எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார்.

இந்நிலையில் நடிகர் ஷாம் உடற்பயிற்சியின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று வெளியாகி இணையத்தில் மீம்ஸ் ட்ரோல்ஸ் என செம ட்ரெண்ட் ஆகிவருகிறது. ஆம் அதில் கிளீன் ஷேவ் செய்துள்ள நடிகர் ஷாம், நடிகர் ஆர்யாவுடன் சேர்ந்து போஸ் கொடுத்துள்ளார். மேலும் நடிகர் ஷாம் மற்றும் ஆர்யா இருவரும் ஒன்றாக உள்ளம் கேட்குமே திரைப்படத்தில் நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதோ அந்த புகைப்படம்..

Leave a Reply

Your email address will not be published.