கடந்த சில மாதங்களாகவே நித்யானந்தா விவகாரம் பெரும் சர்ச்சையையே ஏற்படுத்தி வருகிறது. இதுவரை நித்தியானந்தா எங்கு தான் இருக்கிறார் என்று தெரியாமல் பொலிசாரும் திணறி வருகிறார்கள். மேலும், நித்யானந்தாவின் தனிப்பட்ட செயலாளர் ஜனார்த்தன சர்மா தனது 3 மகள்கள் மற்றும் ஒரு மகனை குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் உள்ள நித்யானந்தா ஆசிரமத்தில் சேர்த்திருந்தார்.

அவர்களை மீட்டுக மேற்கொண்ட நடவடிக்கைகளால் கடந்த நவம்பர் 3ம் தேதி 3வது மகளும் மகனும் மீட்கப்பட்டனர். அதைத்தொடர்ந்து, மூத்த மகள் லோபமுத்ரா என்ற தத்துவப்ரியானந்தா மற்றும் 2வது மகள் நந்திதா என்ற நித்ய நந்திதா ஆகிய 2 பேரும் இந்தியாவில் இல்லை என்று ஆசிரமத்தின் சார்பில் கூறப்பட்டது. இந்த நிலையில், மேற்கிந்திய தீவுகளில் நித்யானந்தா தங்கியிருப்பதாகவும், அவருடன் இந்த 2 இளம்பெண்களும் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் தான், தனது உயிருக்கு ஆபத்து என்றும், அடுத்த வீடியோ வெளியிடுவதற்குள் தான் உயிரோடு இருப்பேனோ இல்லையோ எனத் தெரியவில்லை என்றும் தத்துவப்ரியா பேசுவதுபோன்ற வீடியோ வெளியானது.
இந்த வீடியோவைக்கண்ட ஜனார்த்தன சர்மா, இதுகுறித்து அகமதாபாத், விவேகானந்த நகர் பொலிசாரிடம் புகார் அளித்துள்ளார். இந்நிலையில் தத்துவப்பிரியானந்தா வெளியிட்ட புதிய வீடியோவில் உயிருக்கு அச்சுறுத்தல் என தாம் கூறியது ஒன்றரை ஆண்டுக்கு முன் வெளியிடப்பட்ட வீடியோ என்றும் தனக்கு அச்சுறுத்தல் இல்லை என்றும் விளக்கம் அளித்துள்ளார். மேலும், நான் நித்யானந்தா ஆசிரமத்தை விட்டு வெளியேற விரும்புவதாகவும், என் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும் கூறப்பட்ட வீடியோ சமீபத்தில் வெளியாகி வைரலானது.