‘என்னை அறிந்தால்’ படத்தில் சிறு வயது அஜித்தாக நடித்த சிறுவனா இது..? இப்போ எப்டி இருக்காருன்னு என்று நீங்களே பாருங்கள்.

இந்திய அளவில் தல என செல்லமாக அழைக்கப்படுபவர்கள் இரு பிரபலங்கள் தான் ஒன்று நம் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் தோனி என்றால் மற்றொருவர் தென்னிந்திய சினிமாவின் ஆசை நாயகன் அஜித்குமார்.தனது அழகான தோற்றத்தாலும் நடிப்பாலும் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே வைத்துள்ளார்.இவர் நடிப்பைத்தாண்டி இயல்பு வாழ்க்கையில் அவரது நல்ல குணதிசாயங்களுக்காகவே இன்றளவும் மக்கள் மத்தியில் புகழின் உச்சியில் உள்ளார்.

தமிழில் அமராவதி திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகி 50 க்கும் மேற்பட்ட திரைபடங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார்.தான் செய்யும் சிறிய உதவியானாலும் விளம்பரப்படுத்தும் இந்த காலத்தில் தல பல உதவிகளை யாருக்கும் தெரியாமல் செய்து வருகிறார். இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் தல அஜித் நடிப்பில் கடந்த 2015 ஆம் வெளியான ‘என்னை அறிந்தால் ‘ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றது.

அந்த ‘படத்தில் சிறு வயது அஜித்தாக நடித்தவர் தான் ஜாக் ராபின்சன்.அதனை தொடர்ந்து இயக்குனர் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான

தனி ஒருவன் படத்தில் அரவிந்த் சாமியின் சிறுவயது கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் ஜாக் ராபின்.அதன் பிறகு விஜய் ஆண்டனி நடித்த ‘தி மிருபுடிச்சவன்’ படத்திலும் நடித்துள்ளார்.

துணை கதாபாத்திரத்தில் நடித்த மூன்று படங்களிலும் தனது சிறப்பான நடிப்பால் கவனத்தை ஈர்த்த ஜாக் ராபின் தற்போது அடுத்தபடியாக சிவகார்த்திகேயன் நடிக்க உள்ள ‘ஹீரோ’ படத்தில்,

முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறாராம். தற்போது ஜாக் ராபின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.