என்னை அனைவரும் கல்லை கொண்டு எறிவார்கள்: தினமும் வேதனையை அனுபவிக்கும் சிறுவன்..!! உண்மையில் அவருக்கு நிகழ்ந்ததென்ன?

Hypertrichosis என்னும் நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் இந்திய சிறுவன் தினம் தோறும், தான் அனுபவிக்கும் சித்ரவதை குறித்து பெரும் வேதனை தெரிவித்துள்ளான். இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த லலித் பாட்டீடர் (13) என்கிற சிறுவன் மிகவும் அரிதாக வரக்கூடிய ஓநாய் நோய்க்குறி என்று அழைக்கப்படும் ஹைபிரைடிசோசிஸ் என்னும் நோயால் பாதிக்கப்பட்டுள்ளான். இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடல் முழுவதும் அதிகமான முடிகள் வளர்ந்து காணப்படும். இந்த பாதிப்பு குறித்து சிறுவன் கூறுகையில், பள்ளியில் பிரபலமாகவும், படிப்பில் கெட்டியாகவும் இருந்து வருகிறேன். வழக்கமாக என்னை பார்ப்பவர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்கிறார்கள்.

ஆனால் புதிதாக பார்ப்பவர்கள் என்னை குரங்கு என நினைத்து கல்லை கொண்டு எறிவார்கள். எனக்கு பொலிஸ் அதிகாரியாக வேண்டும் என்ற ஆசை உள்ளது. தவறு செய்பவர்கள் அனைவரையும் பிடித்து சிறையில் அடைக்க வேண்டும். பிறக்கும்பொழுதே என்னுடைய முகத்தில் அதிக முடிகள் இருந்தது. சில நேரங்களில் நான் மற்ற குழந்தைகளை போல இருக்க ஆசைப்படுகிறேன். ஆனால் அது என்னால் முடியாது என்பதால், என்னுடைய வழியில் நிம்மதியாக இருக்கிறேன்.

இது குறித்து அவருடைய தாய் பார்வதிபாய் (42) கூறுகையில், லலித் பிறப்பதற்கு முன்பு எனக்கு 5 பெண் குழந்தைகள் பிறந்தனர். அனைவரும் பெண் குழந்தைகள் என்பதால், ஆண் குழந்தை வேண்டி ஏராளமான கோவில்களுக்கு சென்று வேண்டுதல் வைத்தேன். ஒரு வழியாக லலித் பிறந்ததும் அதிக மகிழ்ச்சியடைந்தேன்.

ஒரு மணி நேரம் கழித்து குழந்தையை பார்க்கும் போது தான் பெரும் அதிர்ச்சியடைந்தேன். உடன் முழுவதும் முடி இருப்பதை பார்த்து, மருத்துவருக்கு தகவல் கொடுத்தேன். பரிசோதனை மேற்கொண்ட அவர், இதனை குணப்படுத்த முடியாது எனக்கூறியதாக வேதனை தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *