என்னுடன் டேட்டிங் செய்யும் ஆணுக்கு 1 கோடி தருகிறேன்..!! காதலர் தினத்தை முன்னிட்டு 23 வயது இளம் பெண் வெளியிட்ட வினோத ஆஃப்பர்

பிரித்தானியாவைச் சேர்ந்த யூரோ மில்லியன் லாட்டரி வின்னர் பெண் ஒருவர் தன்னுடன் டேட்டிங் செய்ய விரும்பும் ஆண்களுக்கு ஒரு கோடி தருகிறேன் என்று கூறிய நிலையில், தற்போது வரை அவருக்கு யாரையும் பிடிக்கவில்லை என்பது தெரியவந்துள்ளது. பிரித்தானியாவின் ஈடன்பர்க் பகுதியைச் சேர்ந்தவர் Jane Park. 23 வயதான இவர் தன்னுடைய 17 வயதில் ஒரு மில்லியன் பவுண்ட்சுக்கு சொந்தக்காரியாக மாறினார். அதாவது இவருக்கு ஒரு மில்லியன் பவுண்ட்ஸ் லாட்டரியில் பரிசாக விழுந்தது. இதை வைத்து இவர் புதியகார்கள், அழகுக்காக மார்பக அறுவை சிகிச்சை மற்றும் உடலில் பிளாஸ்டிக் சர்ஜரி போன்றவைகள் செய்து கொண்டார்.

இதையடுத்து இவர் தன்னுடைய காதலனை பிரிந்துவிட்டார். இதனால் Jane Park தன்னுடன் டேட்டிங் செய்வதற்கு ஆண் வேண்டும் எனவும் அந்த நபருக்கு ஆண்டுக்கு 60,000 பவுண்ட் (இந்திய )மதிப்பில் 1,37,38,945 கோடி ரூபாய்) தர தயாராக இருப்பதாக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கூறியிருந்தார். தனியாக இருப்பதால், பாதுகாப்பற்ற நிலையை உணர்கிறேன். உண்மையாக தன்னை பார்த்து கொள்ளும் ஆண் ஒருவர் வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.

இதற்காக தனியாக இணையதளம் ஒன்றையும் உருவாக்கியிருந்தார். அதில் 10,000-க்கும் மேற்பட்ட ஆண்கள் விண்ணப்பித்திருந்தனர். தனிமையை உணர்வதால், அப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்ட Jane Park, இப்போது எப்படி இருக்கிறார்? காதலன் கிடைத்துவிட்டாரா? என்று பார்த்தால் தற்போது வரை தனிமையாகவே இருக்கிறார்.

காதலர் தினம்(பிப்ரவரி 14) இன்னும் சில தினங்களில் வரவிருப்பதால், அவர் என்னிடம் யாரும் முகவரி கேட்கவில்லையே? நான் சிலரிடமிருந்து காதலர் தின கார்டுகளை எதிர்பார்க்கிறேன் என்று கூறியுள்ளார். அதுமட்டுமின்றி நான் நினைத்தது போன்று எனக்கு மகிழ்ச்சியாக வைத்து கொள்ளும் நபர் இன்னும் கிடைக்கவில்லை என்று கூறியுள்ளார். இவரை டுவிட்டரில் மட்டும் சுமார் 26000-க்கும் மேற்பட்டோர் பின்பற்றி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.