என்னது..! பிக் பாஸ் வருணுக்கு திருமணம் ஆகிருச்சா..? இணையத்தில் வெளியான தகவலால், ஷா க்கான ரசிகர்கள்..!

என்ன தான் தொலைக்காட்சிகளில் பல விதமான ரியாலிட்டி நிகழ்ச்சிகள் இருந்தாலும் மக்களுக்கு பிடித்தமான அல்லது மக்களிடம் நல்ல வரவேற்பை பெறுவது என்னவோ ஒரு சில நிகழ்ச்சிகள் தான், என்று தான் சொல்ல வேண்டும். அந்த வகையில், சின்னத்திரையின் பிரமாண்ட நிகழ்ச்சிகளில் ஒன்று தான் பிக் பாஸ் நிகழ்ச்சி. மேலும், இந்த நிகழ்ச்சியை, சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பார்த்து வருகிறார்கள் என்று சொல்லலாம்.

இந்நிலையில், இதனுடைய 5வது தற்போது பிரபல டிவியில் நடைபெற்று வருகிறது. கடந்த வாரம் கூட, யாரும் எதிர்பார்க்காத முறையில், அபிஷேக் வீட்டை விட்டு வெளியேறினார். மேலும் இதுவரை நாடியா, நமிதா மாரிமுத்து, அபிஷேக் மற்றும் சின்னப்பொண்ணு என நான்கு நபர்கள் வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர், என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. மேலும், மீதம் 14 போட்டியாளர்கள் வீட்டிற்குள் இருக்கும் நிலையில், தற்போது இருக்கும் போட்டியாளர்களில் ஒருவரான வருண்,

ஒரு சில தமிழ் படங்களில் நடித்துள்ளார், கோ மாளி, வனமகன், ஒரு நாள் இரவில், போகன் போன்ற படங்களில் நடித்துள்ளார் இவர். இந்நிலையில், இவருக்கு திருமணம் ஆகி விட்டது என்பன போன்ற தகவல்கள் இணையத்தில் அரசல் புரசலாக வெளியாகி வருகிறது. ஆனால், நிஜத்தில் இவருக்கு திருமணம் ஆகவில்லை, அவர் இன்னும் சிங்கள் தான்.