தமிழ் சினிமாவில் பாட்டி கதாபாத்திரத்தில் பலர் வந்து செல்கின்றனர். அதில் நம் மண்டத்தில் நிற்கும் கதாபாத்திரங்கள் ஒருசிலவை தான். அந்த வரிசையில் தூள் படத்தில் ‘சிங்கம் போலவே” என்ற பாடல் மூலம் அறிமுகமானவர் தான் பறவை முனியம்மா அவர்கள். இந்த படத்தை தொடர்ந்து பல படங்களில் நடித்துள்ளார் இவர். அதன் பிறகு சினிமா பக்கமே காணோம் என்று தான் கூற முடியும்.
இந்நிலையில் .இவர் கடந்த சில வருடங்களாக உடல் நலக் குறைவால் சிகிச்சை கூட பணம் இல்லாமல் கஷ்டப்பட்டு வந்தார். இந்த செய்திகள் நாம் அறிந்தவை தான். அவரது பண கஷ்டம் கேள்விப்பட்டு அரசும், நடிகர் சிவகார்த்திகேயன், அபி போன்றோர் உதவி செய்தனர் என்று கூறப்படுகிறது. மேலும், தான் இசாரி கணேஷ் அவர்கள் பறவை முனியம்மாவை மதுரையில் உள்ள பெரிய மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சைக்கு உதவினார் என்ற செய்தியும் வெளியாகியுள்ளது.

எனவே சிகிச்சை பலன் இன்றி அவர் இறந்ததாக செய்திகள் வெளிவந்தது. அந்த செய்தி நம்மளை பல கோணங்களில் யோசிக்க வைத்து. ஆனால் அவர் நலமாக தான் இருக்கிறார், எந்த பிரச்சனையும் இல்லை என வீடியோ ஒன்றை பதிவு செய்து வெளியிட்டுள்ளார் நடிகர் அபி சரவணன். அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பல பெயரால் பார்க்கப்பட்டு வருகிறது.