என்எஸ்கே ரம்யா மற்றும் அவரது கணவர் Mr&Mrs சின்னத்திரையில் பங்குப்பெற்றதற்கு இதுதான் காரணமா? வெளியான தகவல்..

சீரியல், காமெடி, நடனம், பாடல், என பல வருடங்களாக மக்கள் மகிழ வைத்து வரும் தொலைக்காட்சிகளில் ஒன்று விஜய் டிவி. தற்போது மிக பிரபலமாக நல்ல வரவேற்பை பெற்று ஓடும் நிகழ்ச்சி மிஸ்டர் அண்ட் மிஸ்ஸஸ் சின்னத்திரை. இந்த சீசனை நடுவராக கோபிநாத் மற்றும் தேவதர்ஷினி உள்ளனர். மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியில் இருந்து பிரபல பாடகி ரம்யா மற்றும் அவரது கணவர் ஆகியோர் செமி பைனல்ஸில் பங்கு கொள்ளவில்லை என்ற தகவல் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

இதற்கு என்ன காரணம் என்று தெரியாமல் ரசிகர்கள் புலம்பி வந்தனர். இரண்டு வாரங்கள் திடீரென அவர்கள் பங்கு பெறவில்லையாம். இந்நிலையில் இதற்கான காரணம் என்ன என்பதை அவர் தற்போது வெளியிட்டுள்ளார். அவர் கூறும்போது “இரண்டாம் இடத்தை பிடித்துள்ளோம் என்பதை கேட்டு மகிழ்ச்சி அடைந்தோம். சீரியஸாக 2 ரவுண்டுகள் தான் தாண்டுவோம் என்று நினைத்தோம். எல்லா அன்பிற்காகவும் நன்றி.

எனக்கு சிறிய வைரல் ஜுரம் இருந்ததால் தான் நாங்கள் மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியில் பங்கு கொள்ள முடியவில்லை. தற்போது சுகம் அடைந்து வருகிறேன் என்றும் பிரபல பாடகி ரம்யா கூறியுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் அவர்களுக்கு ஆறுதல் கூறிவருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.