” எனக்கு ஆண்மையே கிடையாது” 3 பெண்களை சூறையாடிய கொடூரன் பரபரப்பு வாக்குமூலம்…! போலீசார் வெளியிட்ட மேலும் பல தகவல் உள்ளே..!

சமீபகாலமாக நம் நாட்டில் பெண்களுக்கு எதிராக பல கொடுமையான நிகழ்வுகள் நடந்து கொண்டே தான் வருகிறது. சில குற்றவாளிகள் தண்டிக்கபட்டாலும் பல மனித மிருகங்கள் இந்த தவறை நிறுத்துவதாக தெரியவில்லை ஏந்திபாது தான் உண்மை.. கடந்த 2019ம் ஆண்டு ஏப்ரல் மாதம், தெலுங்கானா மாநிலம், ஹஜிபூர் கிராமத்தில் 3 சிறுமிகள் மாயமாகினர். அவர்களை தேடியபோது, அவர்களுக்கு இருசக்கர வாகனத்தில் லிஃப்ட் தருவதாகக் கூறி, மறைவான இடத்திற்கு அழைத்துச் சென்று வன்புணர்வு செய்து, பிறகு கொன்றுவிட்டு, மறைவான இடத்தில் சடலத்தை மர்ம நபர் புதைத்துச் செல்வதாக தெரியவந்தது. இதன்படி, விசாரித்த போலீசார், அதே பகுதியை சேர்ந்த ஸ்ரீனிவாஸ் ரெட்டி என்ற நபரை கைது செய்தனர்.

அந்த நபரை வைத்து டிஎன்ஏ பரிசோதனை உள்பட பலவற்றையும் செய்து, இவர்தான் சம்பந்தப்பட்ட சிறுமிகளை கடத்திச் சென்று வன்புணர்ந்து, கொல்பவர் என்பதை போலீசார் உறுதிப்படுத்தினர். இதற்காக, 72 பேர் சாட்சியமும் அளித்தனர். இந்நிலையில், இந்த வழக்கின் இறுதிக்கட்ட விசாரணை தற்போது நடைபெறுகிறது. கடந்த வெள்ளியன்று நடைபெற்ற விசாரணையின்போது, குற்றம் சாட்டப்பட்ட ஸ்ரீனிவாஸ் ஒரு பரபரப்பு தகவலை வெளியிட்டார். அதாவது, ”நான் ஒரு ஆண்மையில்லாதவன். என்னால் யாருடனும் செக்ஸ் உறவு செய்ய முடியாது. போலீசார் வேண்டுமென்றே உண்மைக் குற்றவாளியை தப்பவைத்து விட்டு, என்மீது பொய் புகார் சுமத்துகின்றனர்,” என்று அவர் குறிப்பிட்டார்.

இந்த நபர் சில ஆண்டுகளுக்கு முன், ஏற்கனவே ஒரு பெண்ணை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டதை நீதிமன்றம் மேற்கோள் காட்டியது. ஆனால், அதுவும் ஒரு ஜோடிக்கப்பட்ட வழக்கு என, ஸ்ரீனிவாஸ் கூறியுள்ளார். இதையடுத்து, வழக்கை ஜனவரி 6ம் தேதிக்கு, நீதிபதிகள் ஒத்தி வைத்தனர். இந்த வழக்கத்து மக்களின் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!