எந்த ஆம்பளையையும் நான் நம்புறது இல்லை..!! நான் ஏன் இன்னும் கல்யாணம் பண்ணிக்கல தெரியுமா..?? பிரபல சீரியல் நடிகை ஷில்பா ஓபன் டாக் ..!!

தொலைக்காட்சி தொடர்கள் தான் வீட்டில் உள்ள பெண்களுக்கு பொழுதுபோக்கு என்று சொல்லலாம். அந்த அளவிற்கு பெண்களை கவரும் வகையில் தொலைக்காட்சி தொடர்கள் எடுக்கப்படுகிறது. அன்று முதல் இன்று வரை தொலைக்காட்சியில் நடிக்கும் பல பேர் மக்கள் மனதில் இடம் பிடிக்கும் அளவிற்கு அவர்களின் நடிப்பை வெளிப்படுத்துகிறார்கள். சினிமாவில் எந்த அளவிற்கு முக்கிய துவம் வாய்ந்ததோ. அதே அளவிற்கு தொலைக்காட்சி தொடர்களில் நடிக்கும் நடிகர் நடிகைகளுக்கும்
கொடுக்கப்படுகிறது என்று தான் சொல்ல வேண்டும்.

மேலும் சீரியல் பார்க்கும் வழக்கம் உள்ளவர்களுக்கு சின்னத்திரை ஷில்பாவை தெரியாமல் இருக்க முடியாது. இவர் கடந்த இருபது வருடங்களுக்கும் மேலாக சின்னத்திரையுலகில் உள்ளார். தொடர்கள் பாக்கும் அனைவருக்கும் இவரின் முகம் தெரியாமல் இருக்க வாய்ப்பே இல்லை என்று தான் சொல்ல வேண்டும். அந்த அளவிற்கு இவர் மக்களிடத்தில் மிகவும் பிரபலம் ஆகிவிட்டார்.‘மெல்ல திறந்தது கதவு’, ‘தாமரை, உள்பட பல சீரியல்களில் நடித்திருக்கிறார். இந்த நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் அவர் கூறியபோது, ‘எங்கப்பாவை போல ஒரு நேர்மையாளரை இதுவரை நானும் என்னுடைய அக்காவும் பார்க்கவில்லை.

அப்படி பார்த்தால் திருமணம் செய்து கொள்ளலாம். இல்லாவிட்டால் இருவருமே கடைசி வரைக்கும் திருமணம் செய்யாமலே இருக்க முடிவு செய்துள்ளோம்’ என்று கூறியுள்ளார்.
மேலும் தனக்கு ஏகப்பட்ட லவ் புரபோசல் வந்துள்ளதாகவும், என் மீது உயிரையே வைத்திருப்பதாக கூறியவர் அனைவரும் இன்று திருமணம் ஆகி குழந்தைகளுடன் இருப்பதாகவும், இந்த மாதிரி காதல் மீது தனக்கு சிறிதும் நம்பிக்கை இல்லை என்றும் அந்த பேட்டியில் அவர் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.