“எங்கேயும் எப்போதும்” படத்தில் சர்வா-அனன்யா வேடத்தில் முதலில் நடிக்க இருந்தது இவர்களா..? வெளியான சுவாரசிய தகவல் இதோ..

தமிழ் சினிமாவில் என்ன தான் பல நூறு படங்கள் வெளியானாலும் ஒரு சில படங்கள் மக்களிடத்தில் இன்னும் மறையாத மாறாத ஒரு படமாக எப்போதும் அவர்கள் மனதில் நிலைத்து நிற்கும். அந்த வரிசையில் இந்த படம் நிச்சயம் இருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. அந்த வகையில் இயக்குனர் சரவணன் இயக்கத்தில் ஜெய், அஞ்சலி, சர்வா, அனன்யா ஆகியோர் நடிப்பில் வெளியான ஒரு திரைப்படம் எங்கேயும் எப்போதும்.

2011ம் ஆண்டு வெளியான இப்படம் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது, என்று தான் சொல்ல வேண்டும். முக்கியமாக ஜெய்-அஞ்சலி ஜோடியும், சர்வா-அனன்யா ஜோடியும் ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்பட்டது. இப்படத்தில் முதலில் சர்வா-அனன்யா வேடத்தில் நடிக்க விமல் மற்றும் அமலா பாலிடம் தான் முதலில் பேசப்பட்டுள்ளது. ஆனால் அவர்கள் வேறு படங்களில் கமிட்டாகி இருந்ததால் அவர்களுக்கு பதிலாக சர்வா-அனன்யா கமிட்டாகியுள்ளனர்.

அதேபோல் இப்படத்திற்கு முதலில் இசையமைக்க தமன் தாக் பேசப்பட்டுள்ளார், சில காரணங்களால் அவர் வெளியேற பின் சத்யா கமிட்டாகியுள்ளார். மேலும் சத்யா அவர்களின் இசை பட்டிதொட்டி எங்கும் பிரபலமானது என்று சொல்லலாம்…