எங்கள் இருவருக்கும் உள்ள பிரச்சினை என்ன..? பல உண்மைகளைக் உடைத்தெறிந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை…!

சமீப காலமாக தொலைக்காட்சி தொடர்கள் குடும்ப பெண்களை தாண்டி அணைத்து தரப்பு மக்களாலும் பார்த்து ரசிக்க தோன்றும் வகையில் உள்ளது. அப்படி பட்ட தொடர்களில் ஒன்று தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் என்னும் தொடர்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் நிகழ்ச்சி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பினைப் பெற்று வருகின்றது. இந்த சீரியலில் ஸ்டாலின், சுஜிதா, வெங்கட் ரங்கநாதன், ஹேமா ராஜ்குமார், சித்ரா, குமரன் தங்கராஜன், ஹேமா விக்ரம் என பல நடிகர்கள் நடிக்கிறார்கள்.  இதில் மூன்றாவது ஜோடியாக நடிக்கும் கதிர், முல்லையின் ரொமான்ஸ், கெமிஸ்ட்ரி எல்லாம் வேற லெவல் என்றே கூறலாம்.

ஆனால் இவர்கள் சீரியலில் சிறந்த ஜோடியாக இருந்தாலும், ரியலில் இவர்கள் எலியும் பூனையாக இருக்கின்றனர் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து சித்ரா கூறுகையில், நான் எப்பொழுதுமே ஒரே மாதிரியாக இருப்பேன். ஆனால் குமரன் அவ்வாறு இருக்க மாட்டார்.  மேலும் ரசிகர்கள் கூறுவது போன்று எங்கள் இருவருக்குமிடையே சண்டை எதுவும் இல்லை. ஆனாலும் சீரியல் கதாபாத்திரத்தில் மட்டும் தான் பேசிக்கொள்வோம் என்று நாசுக்காக பதில் கூறி உண்மையை மறைத்துள்ளார்.

நான் கஷ்டப்பட்டு பல அவமானங்களைத் தாண்டி இந்த இடத்திற்கு வந்துள்ளேன். குறித்த சீரியலிலிருந்து வெளியேறுகிறேன் என்று கூறுவதெல்லாம் வதந்தி என்றும் தனக்கு நெருங்கிய நண்பர்கள் என்று யாரும் கிடையாது. எனது கார் தான் என்று கூறுவேன். காரிடம் பேசிக்கொண்டு, சில தருணங்களில் அழுதுவிடுவேன். பின்பு எனக்கு ஏற்பட்ட மனக்கஷ்டம் எல்லாம் காணாமல் போய்விடும் என்று தெரிவித்துள்ளார். இறுதியாக குமரன் அவரது வேலையில் சரியாக இருக்கின்றார். நான் எனது குறிக்கோளில் சரியாக இருக்கிறேன். 

Leave a Reply

Your email address will not be published.