உலகிலேயே மிக அழகான மீன் வியாபாரி பெண்!! இணையத்தில் வைரலாகும் புகைப்படம் மற்றும் வீடியோ…

தாய்வான் சாங்ஹவுவா மாவட்டத்தை சேர்ந்த 26 வயதுடைய லியு பெங்பெங் என்ற இளம்பெண்ணின் தாயார் மீன் விற்று வருகிறார். இந்நிலையில், லியு பெங்பெங் தனது தாயிக்கு உதவும் வகையில், தனது தாயின் மீன் கடையில் மீன் வியாபாரம் செய்துள்ளார். அப்போது கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் அவரின் புகைப்படங்களை முகநூளில் பதிவிட்டுள்ளனர். அந்த புகைப்படங்கள் அனைத்தும் இணையதளத்தில் பயங்கர வைரலாக பரவியுள்ளது.

தனது 26 வயதில் உலகிலேயே மிக அழகான மீன் வியாபார பெண் என்ற பெயரில் பிரபலமாகியுள்ளார். இது குறித்து லியு-வின் தாய் கூறுகையில், அவருடைய மாடலிங் தோற்றங்களுக்கு இடையில் குடும்ப வணிகத்திறக்கும் உதவுகிறார். மேலும் இவள் வியாபாரம் செய்தால் அன்றைக்கு வியாபாரம் சராசரியான அளவை விட அதிகமாக விற்பனையாகும் என கூறினார். இது குறித்து லியு தனியார் பத்திரிக்கைக்கு பேட்டியளிக்கையில், என் குடும்பம் நான்கு தலைமுறைகளாக மீன் விற்பனை செய்து வருகிறது.

வணிகம் நல்ல முறையில் இருப்பதற்கு, இங்கு உள்ள நிறையப் பேர் இப்போது தங்கள் தொலைபேசிகளில் என்னை படப்பிடிப்பு செய்வதில் பிஸியாக இருக்கிறார்கள், என் அம்மாவிடமிருந்து அவர்கள் அதிக மீன் வாங்குவதை நான் விரும்புகிறேன், என அவர் தெரிவித்துள்ளார். மேலும் அவர் தனது அன்னைக்காக சந்தையில் பணிபுரிவதை தொட்ரவதாகவும் அவர் உறுதியளித்தார்.

Leave a Reply

Your email address will not be published.