உலகநாயகன் கமல்ஹாசனை மிரட்டிய மீரா மிதுன்.. பயங்கரமாக கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்று சீன்களை தொகுத்து வழங்கியவர் உலகநாயகன் கமல்ஹாசன். அந்நிகழ்ச்சியில் மூன்றாம் சீனில் மீரா மிதுன் வைத்து பல்வேரு பிரச்சனைகள் கிளம்பியது. சமீபத்தில் மாடல் அழகியான மீரா மிதுன் விஜய், சூர்ய மற்றும் ஜோதிகா ஆகியோருக்கு எதிராக அவதூறான அறிக்கைகளை வெளியிடுவதன் மூலம் மீரா மிதுன் சமீபத்தில், செய்திகள் மற்றும் சமூக ஊடகங்களில் பரபரப்பாக பேசப்பட்டார்.

இதனால் ரசிகர்களிடையே விமர்சனத்துக்கு ஆளானார் மீரா மிதுன். இவர், சமீப காலங்களில் நெப்போடிஸம், திரைப்பட மாஃபியா, பெண்கள் அதிகாரம் போன்ற ட்ரெண்டிங்கில் இருந்த தலைப்புகளுக்கு ஏற்ப பல வீடியோக்கள் மற்றும் கருத்துக்களைப் பதிவிட்டுவருவதைக் காணமுடிகிறது. இதனால் இவர் மீது பலரும் கோபத்தில் உச்சிக்கே சென்றுள்ளனர்.

தற்போது, இவர், ட்விட்டர் பக்கத்தில் உலக நாயகன் கமல் ஹாசனை, இந்த ஆண்டு பிக் பாஸ் நிகழ்ச்சியே நடத்தமுடியாதபடி செய்து விடுவதாக மிரட்டி வீடியோக்களை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோக்கள் இப்போது இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இதைக்கண்ட நெட்டிசன்கள் சும்மா விடுவார்கள்.. அவரை கலாய்த்து தள்ளும் விதமாக மரண ட்ரோல் காட்சியினை வெளியிட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!