உறுதியான தமிழ் பிக் பாஸ் சீசன் 4 போட்டியாளர்கள்..! வெளிவந்த ப்ரமோ வீடியோ

தொலைக்காட்சி ரசிகர்களிடையே மிகவும் பிரபலமான ஒரு நிகழ்ச்சி என்றால் அது பிக்பாஸ் நிகழ்ச்சி தான். கமல் ஹாசனின் முன்னிலையில் மிகவும் பிரமாண்டமாக துவங்கவிருக்கும் நிகழ்ச்சி பிக்பாஸ். இதில் இதுவரை வெற்றிகரமாக மூன்று சீசன்கள் முடிவடைந்துள்ளது. இந்நிலையில் கொரோனா காரணமாக தள்ளிப்போன பிக்பாஸ் சீசன் 4 அடுத்த மாதம் முதல் வாரத்தில் இருந்து துவங்கவிருக்கிறது என தகவல்கள் தெரியவந்துள்ளது.

இந்த சீசனில் கலந்து கொள்ளப்போகும் போட்டியாளர்களின் பட்டியில் இதுவரை அதிகாரப்பூர்வாக வெளிவரவில்லை என்றாலும், கிட்டத்தட்ட 14 போட்டியாளர்களின் பெயர்கள் இணையத்தில் கசிந்தன. இதில் நடிகர் ரியோ ராஜ், ஜித்தன் ரமேஷ், ஷிவானி, ரம்யா பாண்டியன், நடிகை ரேகா, அணு மோகன், வேல்முருகன், சனம் செட்டி, நடிகை கிரண், விஜய் டிவி கப்பிரியல் என 90% சதவீதம் உறுதி செய்த பட்டியல் வெளியானது.

இந்நிலையில் இதில் 100% சதவீதம் நடிகை ரம்யா பாண்டியன் பிக்பாஸில் உறுதி செய்யப்பட்டுள்ளார் என விஜய் தொலைக்காட்சி வெளியிட்டுள்ள ப்ரமோ மூலம் தெரியவந்துள்ளது. ஆம் ரம்யா பாண்டியன், கலக்கப்போவது யாரு சீசன் 9ல் நடுவராக இருந்து வந்தார். ஆனால் இந்த வாரம் ஒளிபரப்பாகும் Kpy சீசன் 9 நிகழ்ச்சியில் ரம்யா பாண்டியன் நடுவராக பங்கேற்கவில்லை என்பது ப்ரமோ மூலம் தெரியவந்துள்ளது. இதனால் பிக்பாஸ் சீசன் 4ல் கண்டிப்பாக ரம்யா பாண்டியன் கலந்து கொள்ள தனிமைப்படுத்தப்பட்டுள்ளார் என இந்த ப்ரமோ மூலம் தெரிகிறது.

Leave a Reply

Your email address will not be published.