உயிருக்கு போராடிய மகனை காப்பாற்ற முயற்சித்த தாய்! இறுதியில் தாயும் மகனும் உயிரிழப்பு! சோகத்தில் ஆழ்த்திய சம்பவம்!!!

நாம் அன்றாடம் பல விஷமான நிகழ்வுகளை கேள்விப்பட்டு வருகிறோம், அது போன்ற நிகழ்வுகளில் மிகவும் ஒரு சோகமான நிகழ்வு தான் இது.. குருணாகலில் ஏரியில் குளிக்கச் சென்ற தாயும் மகனும் நீரில் மூழ்கி உயிரிழந்தள்ளதாக
போலீசார் தெரிவித்துள்ளனர். பொதுஹெர – மஹபிட்டிய, கஹகமுவ ஏரியில் குளிக்க சென்றவர்களே நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். இந்த அனர்த்தம் காரணமாக 12 வயதான பாடசாலை மாணவன் ஒருவர் குருணாகல் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக குறிப்பிடப்படுகின்றது.

உயிரிழந்த தாயார் தனது மகனுடன், மகளின் வீட்டிற்கு சென்ற நிலையில், மாலை 4.30 மணியளவில் ஒரு குழுவினருடன் ஏரிக்கு குளிக்க சென்றுள்ளார். இதன் போது தனது மகன் மற்றும் மற்றுமொரு மாணவன் நீரில் மூழ்கியுள்ளனர். அவர்களை காப்பாற்றுவதற்காக இரண்டு தாய்மார்கள் ஏரிக்குள் குதித்துள்ளனர்.எனினும் இதன் போது 44 வயதான தாய் மற்றும் 15 வயதான பாடசாலை மாணவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். தனது அன்பு மகனை காப்பற்ற சென்று தாய்க்கு இப்படி ஒரு சோகமான நிலை வந்துவிட்டதே என்று நினைத்து பலர் வருத்தத்துடன் உள்ளனர். இந்தஎ சம்பவமானது அந்த பகுதி மக்கிலிடம் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

Leave a Reply

Your email address will not be published.