உதவி செய்த நடிகரை கழட்டி விட்டு விட்டு கள்ளகாதலனோடு ஓடிய நடிகை! – அதிர்ந்து போன திரையுலகம்!

ஊருக்கு ஒன்னுனா ஓடி ஓடி போய் உதவி செய்த நடிகருக்கு, ஒரே அடியாய் ஆப்பு வைத்து விட்டு கிளம்பியுள்ளார், அவர்ஆசை ஆசையாய் காதலித்து, ரகசியமாக திருமணமும் செய்து கொண்ட நடிகை. இந்த தகவல் மெல்ல மெல்ல வெளியே வர பலர் நடிகருக்கு போன் போட்டு இது குறித்து விசாரித்து வருகிறார்களாம், இதனால் ஒரே அடியாய் உடைந்து போய் உள்ளார் நடிகர்.

‘கேரள நாட்டிளம் பெண்களுடனே’ என்கிற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் அபி சரவணன். இந்த படத்தை தொடர்ந்து இவர் ஒரு சில படங்களில் நடித்திருந்தாலும் தமிழ் சினிமா ரசிகர்களால் இன்னும் கவனிக்கப்படாத நடிகராகவே உள்ளார்.ஆனால், நடிகர் என்பதை விட சிறந்த மனிதராகவும், சமூக சேவகராகவும் பலராலும் நன்கு அறியப்பட்ட ஒருவராக இருந்து வருகிறார்.

இந்நிலையில், இவரும் ‘பட்டதாரி’ படத்தின் மூலம் அறிமுகமான நடிகை அதிதி மேனனும், கடந்த ஒரு வருடத்திற்கு ஏற்பட்ட நட்பு பின்பு காதலாக மாறியுள்ளது. இதனால் நடிகையை காதலியாக மட்டுமே பார்க்க விரும்பாத அபி சரவணன், அவரை ரகசியமாக திருமணம் செய்து கொண்டு , தனியாக வீடு எடுத்து குடும்பமும் நடத்தி வந்துள்ளார். மேலும் நடிகையின் இஷ்டப்படியே அவரை படத்தில் தொடர்ந்து நடிக்கவும் அனுமதி கொடுத்தார்.

தன்னுடைய காதல் மனைவியை சந்தோஷமாக வைத்து கொள்ள, வீடு முழுவதும் விலை உயர்ந்த பொருட்களை வாங்கி அடுக்கியுள்ளார்.கணவர் பக்கத்தில் இருக்கும் போது மட்டும் ஆசையாய் பேசி வந்த நடிகை அதிதி, அவர் சமூக சேவை பணிகள் மற்றும் ஷூட்டிங் செல்லும் நேரத்தை பயன்படுத்தி, பிரபல நடிகரிடம் பணிபுரிந்த ஒருவருடன் கள்ள காதலில் இருந்துள்ளார். மேலும் அவரோடு செல்லவும் திட்டம் போட்டு தற்போது அதனை செயல் படுத்தியுள்ளார்.

அபி சரவணன் கடந்த சில தினங்களுக்கு முன் வெளியூருக்கு செல்ல, இந்த வாய்ப்பை பயன்படுத்தி, நடிகை வீட்டில் உள்ள அனைத்து ஆடம்பர பொருட்களையும் சுருட்டிக்கொண்டு, வீட்டை காலி செய்து விட்டு சென்றுவிட்டார்.மீண்டும் வீட்டுக்கு வந்து பார்த்த அபி, அதிதிக்கு போன் போட்டு பார்த்துள்ளார். போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. பல மணிநேரம் காத்திருந்துபார்த்து விட்டு, கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தவருக்கு பேரதிர்ச்சியாக இருந்தது. வீட்டில் ஒரு பொருள் கூட இல்லை.

எப்படியோ நடிகையை தேடி கண்டு பிடித்து பேசியுள்ளார், திருமணம் வாழ்க்கைக்கு டாடா காட்டி விட்டு, ஆசை நாயகனுடன் சென்று விட்டதாக ஷாக் கொடுத்து அதிகம் பேசாமல், தொலைபேசியை கட் செய்து விட்டார் நடிகை.

முன்னணி நடிகையாக ஆக வேண்டும் என்கிற நினைப்பில், கேரளாவில் இருந்து தமிழுக்கு வந்த அதிதி, ‘பட்டதாரி’ , மற்றும் ‘களவாணி மாப்பிள்ளை’ ஆகிய படங்களில் நடித்த பின்,’ நெடுநல் வாடை’ என்கிற படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று கொண்டிருந்தபோது, இயக்குனர் காதலிப்பதாக கூறி டார்ச்சர் செய்கிறார் என ட்ராமா போட்டார். பின் இது குறித்து இயக்குனர் புகார் கொடுத்ததில், இவர் கூறியது போய் என நிரூபிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.