உதவிக்கு கிடைத்த பரிசு… நள்ளிரவில் காதலை சொன்ன இளைஞர்!.. கண்ணீருடன் விவரித்த அரந்தாங்கி நிஷா!! முழு விவரம் உள்ளே!

இந்திய மாநிலமான தமிழகத்தில் நாகை, வேதாரண்யம் பகுதிகளில், கடந்த 15-ம் தேதி கஜா புயல் கரையைக் கடந்தது. இந்தப் புயல் தஞ்சை, புதுக்கோட்டை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் கடுமையான சேதத்தை ஏற்படுத்தியதால் மக்கள் ஒட்டுமொத்த வாழ்வாதாரத்தை இழந்து கண்ணீருடன் காணப்படுகின்றனர்.

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ பல்வேறு தரப்பினரும் ஆர்வம் காட்டிவருகின்றனர். குறிப்பாக, அரசியல் கட்சியினர், சினிமா பிரபலங்கள், தன்னார்வ அமைப்பினர் பெரிய அளவில் உதவி செய்து வருகின்றனர்.இந்நிலையில் அரந்தாங்கி நிஷா தன்னால் முடிந்த உதவியினை செய்து வந்தார். அதன் போது அவர் சந்தித்த பல பிரச்சினைகளை கண்ணீர் மல்க கூறியுள்ளார்.

அவர் செய்த உதவியை அவதானித்த ஒரு இளைஞர் அக்கா பிச்சை எடுக்கிறீர்களா? என்றும் மற்றொரு இளைஞர் அக்கா பயங்கர பப்ளிசிட்டி இதுக்குத்தானே இவ்வளவு ஆசைப்பட்டீர்கள் என்று கூறியுள்ளார்.அதற்கு நிஷா நான் பப்ளிசிட்டி செய்து பெரிய பதவிக்கு செல்லப்போகிறேனா? எனக்கு உணவு போட்ட கிராமத்திற்கு நான் உதவி செய்கிறேன் என்று கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், அதிகமான இடத்திற்கு பொருட்கள் கொண்டு சென்ற போது பறிக்கப்பட்டது உண்மையே… தண்ணீர் கேன் அதிக விலைக்கு விற்றதும் உண்மையே…

அதே நேரத்தில் சில இடங்களில் மனிதாபிமானமும் இருந்தது. போர் தண்ணீர், மொபைலுக்கு சார்ஜ் போட்டு கொடுத்தது, குடிக்கும் தண்ணீர் முதற்கொண்டு பாரபட்சம் பாராமல் இலவசமாகவும் கொடுத்தனர். இத்தருணத்தில் கொள்ளையும் நடந்தது, நல்லதும் நடந்தது…மேலும் பணம் எவ்வளவு வைத்திருந்தாலும் இயற்கை நினைத்தால் ஒன்றுமில்லை… இனி பணத்தை சேர்ப்பதற்கு பதிலாக நல்ல மனிதர்களைச் சேர்க்க வேண்டும் என்று தெரிவித்தார்.

 

தனது மொபைல் நம்பரைக் கொடுத்ததால் தனக்கு நேர்ந்த சிக்கலை கூறுகையில், பலருக்கு உதவியாக இருந்தது இரவில் குழந்தையுடன் தூங்கிக் கொண்டிருக்கையில் தனது லவ் ப்ரொபோஸ் இளைஞர் ஒருவர் செய்தார் என்றும் வேதனையுடன் தெரிவித்துள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!