பிக்பாஸ் 4வது சீசனில் கலந்துகொண்டிருக்கும் சிலர் விஜய் தொலைக்காட்சியின் செல்ல பிள்ளைகள் என்றே கூறலாம். அவர்களை தாண்டி இதில் பிக் பாஸ் வீட்டுக்குள் பத்தாவது போட்டியாளராக சோமசேகர் உள்ளே அசத்தல் என்ட்ரி கொடுத்தார். உலக நாயகன் கமல்ஹாசனிடம் மிகவும் பணிவுடன் பேசிய அவர், எங்கே சென்றாலும், சரியான அங்கீகாரம் கிடைப்பதில்லை என்று புலம்பினார்.

பிக் பாஸ் நிகழ்ச்சி தனக்கான அங்கீகாரத்தை கொடுக்கும் என்றே நம்பிக்கையுடன் இந்த ரியாலிட்டி ஷோவில் பங்கேற்றுள்ளார். தமிழ்நாடு மாநில அளவிலான பாக்ஸிங் போட்டிகளில் கலந்து கொண்டு கலக்கி வரும் இவர், 66 கிலோ எடை பிரிவில் கலந்து கொண்டு தங்க மெடல் ஜெயித்துள்ளார். குத்துச்சண்டை எல்லாம் போடுறாரே முரட்டு பீஸா இருப்பாரா? என ரசிகர்கள் எதிர்பார்த்து வரும் நிலையில், நெய் விளம்பரம் ஒன்றில் இவரை அடையாளம் கண்டு கொண்ட பிக் பாஸ் ரசிகர்கள் அந்த விளம்பரத்துக்கு கீழே கமெண்ட்டுகளை செய்து வருகின்றனர்.
உதய கிருஷ்ணா நெய் விளம்பரத்தில் ஆடி பாடி நடித்துள்ள இவர், சினிமாவில் நடிகராக வேண்டும் என்ற கனவோடு இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இருக்கிறார். 1990ம் ஆண்டு பிறந்த சோம சேகருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. 30 வயதாகும் இவர், இந்த பிக் பாஸ் வீட்டில் யாருடன் காதலில் விழப் போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.