ஜீ தமிழ் தொலைக்காட்சியின் பிரபல சீரியல்களில் ஒன்று பூவே பூச்சூடவா. இதன் கதாநாயகியான ரேஷ்மா, இந்த சீரியலில் எப்படி நுழைத்தார் என்பதை சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

அதில், முதலில் நான் இந்த தொலைக்காட்சியில் டான்ஸ் ஷோ ஒன்றில் தான் பங்கேற்றேன். அப்போதே புதிதாக சீரியல் ஒன்றை ஆரம்பிக்க போவதாக பேச்சுகள் எழுந்தன.
ஒருநாள் டான்ஸ் ஆடிவிட்டு சோர்வாக அமர்ந்திருந்தேன். உடல் முழுவதும் வியர்வையில் ஈரமாக, வெறும் ட்ராக், டிசர்ட் மட்டும் தான் அணிந்திருந்தேன். ஒரு குர்த்தாவை போட்டு கொண்டு வர சொன்னார்கள்.
ஒரு வசனத்தை பேச சொன்னார்கள். அவ்வளவு தான் தேர்வாகிவிட்டேன் என சிரித்தப்படி கூறினார்.