உடல் எடை குறைக்கணுமா? இதை மட்டும் பண்ணுங்க.. ஆய்வில் வெளியான ஆயுர்வேத உண்மை..!

உடல் எடையை குறைக்க பல்வேறு வழி முறைகளை நாம் கையாண்டிருப்போம். ஆனால் இவற்றில் கிடைக்காத பலன்கள் வெறும் தண்ணீரை கொண்டு நம்மால் அடைய முடியும் என்றால் அது எவ்வளவு ஆச்சரியத்திற்குரிய விடயமாகும். சீராக நீரை குடித்து வந்தால் பலவித அற்புதங்கள் உடலில் நடக்கும் என ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். பெரும்பாலும் இந்த முறையை ஆயுர்வேத முறையாகவும் கருத்துவர்களாம்.  1 ஸ்பூன் சீரகத்தில் வெறும் 7 கலோரிகளே உள்ளன. முக்கியமாக கொழுப்புக்களை கரைக்க இந்த சீரக நீர் பெரிதும் பயன்படும்.

தொடர்ந்து 20 நாட்கள் இந்த சீரக நீர் குடித்து வந்தால் உடல் பருமன் சட்டென குறையும். சீரகத்தில் அதிகமான அளவில் ஆன்டி ஆக்சிடன்ட்ஸ், வைட்டமின் சி, மற்றும் வைட்டமின் எ முக்கியமான தாதுக்களாகும். அத்துடன் இதில் மக்னீஸ் மற்றும் காப்பர் அதிக அளவில் உள்ளது. எனவே, உடல் பருமன் கூடாமல் இந்த ஊட்டசத்துக்கள் நமது உடலை காத்து கொள்ளும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். சர்க்கரை நோயாளிகளுக்கு இது பெரிதும் உதவும்.

இந்த நீர் இன்சுலின் உற்பத்தியை உடலில் அதிகரிக்க செய்கிறது. டைப் 2 நீரிழிவு நோயாளிகளுக்கு சீரக நீர் மிக சிறந்த மருந்தாகும். முதல் நாள் இரவே சீரகத்தை நீரில் ஊற வைத்து கொள்ளவும். பிறகு அடுத்த நாள் காலையில் இதே நீரை மிதமான சூட்டில் கொதிக்க விட்டு குடித்து வரலாம். இல்லையென்றால் அப்படியே இந்த நீரை குடித்தும் வரலாம். இவ்வாறு 20 நாட்கள் தொடர்ந்து செய்து வந்தால் உடல் எடை எளிமையாக குறையும்.

Leave a Reply

Your email address will not be published.