தமிழ் திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ். மலையாளத்தில் தனது திரையுலக பயணத்தை ஆரம்பித்தலாம், தமிழ் திரையுலகம் மூலமாக தென்னிந்திய அளவில் பேசப்பட்டார். சிவகார்த்திகேயனின் ரஜினி முருகன் படத்தை கீர்த்தி சுரேஷிற்காகவே சிலர் பார்த்தார்கள் என்றே கூறலாம். அதன்பிறகு முன்னணி நடிகர்களுடன் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்த கீர்த்தி தேசிய விருதும் பெற்றிருக்கிறார்.

இதன்பின் தென்னிந்திய முன்னணி நடிகர்களான ரஜினிகாந்த், மோகன்லால் விஜய், நாணி, விக்ரம், சூர்யா, பவன் கல்யாண், துல்கர் சல்மான் உள்ளிட்ட நடிகர்களுடன் இணைத்து நடித்துவிட்டார். இவர் நடிப்பில் தற்போது குட் லக் சகி எனும் படம் விரைவில் வெளிவரவிருக்கிறது. இதுமட்டுமின்றி தெலுங்கில் நிந்தினுடன் இணைந்து ராங் டே எனும் படத்தின் நடித்து வருகிறார். மேலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் அண்ணாத்த படத்தில் மிகவும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
அடுத்தடுத்த பட வாய்ப்புகளுக்கு நடுவில் கீர்த்தி சுரேஷ் தனது உடல் எடையை குறைத்துள்ளார். தற்போது அவர் கருப்பு நிற புடவையில் எடுத்த புகைப்படம் ஒன்று வெளியாக என்ன இந்த அளவிற்கு உடல் எடையை குறைத்துள்ளார். அப்படியே மாறிவிட்டாரே என ரசிகர்கள் அசந்துபோய் கமெண்ட் செய்து வருகின்றனர்.