இன்றைய தலைமுறை அதிகமாக சந்திக்கும் மிக முக்கியப் பிரச்னை உடல் எடை கூடுதல். முன்பெல்லாம் மக்களிடம் அதிகமாக நடந்துசெல்லும் பழக்கம் இருந்தது. ஆனால் இப்போது பக்கத்தில் இருக்கும் கடைக்கே மோட்டார் சைக்கிளை எடுத்துச் செல்லும் பழக்கம் இந்த தலைமுறைக்கு வந்துவிட்டது.

இந்த உடல் எடையைக் குறைக்க சில மூலிகைகளே போதும். இந்தப்பதிவில் அவைகளைப்பற்றிப் பார்க்கலாம்.
துளசி..
உடலில் கொழுப்பு அதிகரித்து அபாயத்தை ஏற்படுத்தக்காரணமான கார்டிசோல் ஹார்மோன் அளவை இது கணிசமாகக் குறைக்கும். இந்த கார்டிசோல் தான் கீழ் வயிற்றில் மிகு கொழுப்பை சேர்க்கும். இதை துளசி இலை கட்டுப்படுத்தும்.
புதினா
கெட்ட கொழுப்புகளை வெளியேற்றுவதில் புதினா முக்கியப்பங்கு வகிக்கிறது. புதினாவை தேநீரில் சேர்ந்து பருகினால் கெட்டக் கொழுப்பு ஓடிவிடும்.
கரிசாலை..
பூக்காத கொட்டைக் கரந்தை, மற்றும் கரிசாலை ஆகியவற்றின் சூரணம் சம அளவில் கலந்து தினமும் காலை, மாலையில் தேனில் ஒரு டீஸ்பூன் அளவு கலந்து சாப்பிட்டால் இளவயது நரைமாறும். இதேபோல் மஞ்சள் கரிசாலையை சமைத்து சாப்பிட்டால் உடல் திகு, திகுவென மின்னும்.
ஊமத்தம் இலை..
இதன் இலையை நல்லெண்ணெயில் வதக்கி கட்டினால் வாதத்தினால் ஏற்படும் வலி, மூட்டுவலி ஆகியவை போய்விடும். இதன் இலைச்சாறுடன், நல்லெண்ணெய் கலந்த் காய்ச்சி இளம் சூட்டில் காதில் விட காதுவலி போகும். நாய்கடித்த புண் கூட, இதன் இலையை நல்லெண்ணெயில் வாட்டி வதக்கி தேய்த்தால் போய்விடும்.
கற்றாழை
இதுவும் கெட்ட கொழுப்பை கரைப்பதில் முக்கிய பங்காற்றுகிறது. இதில் இருக்கும் ஆண்டி ஆக்ஸிடண்ட்கள், நீர்சத்து ஆகியவை உடல் மெட்டபாலிசத்தை அதிகரிக்கும். இதனால் கொழுப்பு வேகமாகக் குறையும். கூடவே உடல் நச்சுக்களையும் வெளியேற்றும். கற்றாழை ஜெல்லை முகத்தில் தேய்த்தால் முகமும் பொலிவுபெறும்.