உச்சக்கட்ட மகிழ்ச்சியில் நடிகர் கார்த்தி குடும்பம்!! குவியும் வாழ்த்துக்கள்- மகிழ்ச்சியில் ரசிகர்கள்..!

தமிழில் சினிமாவில் பருத்திவீரன் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகர் கார்த்தி. தனது முதல் படத்திலேயே தனது எதார்த்தமான நடிப்பில் ரசிகர் மனதில் நீங்க இடம் பிடித்தவர். தற்போது தமிழ் திரையுலகில் முன்னணி ஹீரோவாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர் நடிகர் கார்த்தி. நடிகர் கார்த்தி 2011ஆம் ஆண்டு ரஞ்சனி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவருக்கும் முதல் குழந்தையாக பெண் குழந்தை பிறந்தது. இந்த பெண் குழந்தையின் பெயர் ‘உமையாள்’.

இந்நிலையில் நடிகர் கார்த்தி மீண்டும் ஒரு குழந்தைக்கு தந்தை ஆகியிருக்கிறார். இதுகுறித்து கார்த்தி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், ”எனக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. வாழ்க்கையை மாற்றிய அனுபவத்திற்கு எங்களை அழைத்துச் சென்ற எங்களுடைய மருத்துவர்களுக்கும், செவிலியர்களுக்கும் நன்றி தெரிவிப்பது மட்டும் போதுமானது அல்ல. பிறந்த குழந்தைக்கு உங்கள் அனைவருடைய வாழ்த்துகளும் தேவை. நன்றி கடவுளே,” என தெரிவித்து இருக்கிறார்.

இதேவேளை, கார்த்தியின் சகோதரரும், முன்னணி நடிகருமான சூர்யா, ”மருத்துவர் நிர்மலா ஜெய்சங்கர் மற்றும் அவருடைய குழுவினருக்கு மீண்டும் ஒருமுறை நன்றி,” என தெரிவித்து தன்னுடைய மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டுள்ளார். இதையடுத்து திரைத்துறையினரும், ரசிகர்களும் கார்த்திக்கு தங்களது வாழ்த்துக்களை சமூக வலைதளங்கள் வழியாக தெரிவித்து வருகின்றனர். ரசிகர்களும் உச்சக்கட்ட மகிழ்ச்சியில் உள்ளனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *