தமிழில் சினிமாவில் பருத்திவீரன் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகர் கார்த்தி. தனது முதல் படத்திலேயே தனது எதார்த்தமான நடிப்பில் ரசிகர் மனதில் நீங்க இடம் பிடித்தவர். கார்த்தி தமிழ் நடிகர் சிவகுமாரின் மகன் மற்றும் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் சூர்யாவின் தம்பி ஆவார். பருத்திவீரன் படத்தை தொடர்ந்து ஆயிரத்தில் ஒருவன், நான் மகான் அல்ல, பையா, கோ, சகுனி, மெட்ராஸ் போன்ற பல படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார்.

தமிழ் திரையுலகில் முன்னணி ஹீரோவாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர் நடிகர் கார்த்தி. அதுமட்டுமில்லாமல் விவசாயிகளுக்கு உதவி புரிந்து வருகிறார் நடிகர் கார்த்தி. இவர் தற்போது ரெமோ படத்தை இயக்கிய பாக்யராஜ் இயக்கத்தில் சுல்தான் எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். தெலுங்கு திரையுலகின் சென்சேஷன் நடிகையான ராஷ்மிகா மந்தன்னா இப்படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழில் அறிமுகமாகிறார்.
நடிகர் கார்த்தி 2011ஆம் ஆண்டு ரஞ்சனி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவருக்கும் முதல் குழந்தையாக பெண் குழந்தை பிறந்தது. இந்த பெண் குழந்தையின் பெயர் ‘உமையாள்’. இந்நிலையில் கார்த்தியின் மனைவி ரஞ்சனி இரண்டாம் முறை கர்ப்பமாக இருக்கிறாராம். இதனால் சிவகுமாரின் குடும்பம் மிகவும் ஆனந்தத்தில் உள்ளதாக தெரிவிக்கின்றனர்.