தமிழ் திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்தவர் நடிகை ராதிகா சரத்குமார். இவர் ஒரு இந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நடிகை, தொழில்முனைவோர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார். தமிழ் திரையுலகில் கிழக்கே போகும் ரயிலே படத்தின் மூலம் அறிமுகமானார். தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் முன்னூறுக்கும் மேற்பட்ட படங்களில் ராடிகா நடித்துள்ளார்.

சீரியல் உலகில் எப்போதுமே நடிகை ராதிகா நடிக்கும் சீரியல்களுக்கும், தயாரிக்கும் சீரியல்களுக்கும் ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்புண்டு. சிட்டி, அண்ணாமலை, செல்வி, அராசி, செல்லமாய், வாணி ராணி, தாமரை, இடி கத காடு (தெலுங்கு), மற்றும் சித்தி – 2 போன்ற சீரியல்களைத் தயாரித்த ராடான் மீடியாவொர்க்ஸ் இந்தியா லிமிடெட் இன் நிறுவனர் மற்றும் சிபி ஆவார்.
நடிகை ராதிகாவின் மகள் ரேயானிற்கு சமீபத்தில் பெண் குழந்தை பிறந்ததிருந்தது. இந்த குழந்தைக்கு பாட்டியான ராதிகாவின் பெயர் போலவே ராதியா என்று பெயர் சூட்டியுள்ளனர். இந்நிலையில் குழந்தையுடன் ராதிகா இருக்கும் புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ள ரேயான், ராதி மற்றும் ராது என்னுடைய லக்ஷ்மிகள் என்று குறிப்பிட்டுள்ளார். உங்களுடைய இரண்டு லக்ஷ்மிகளும் அழகாக இருப்பதாக ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள். குறித்த புகைப்படம் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.